மாலத்தீவுக்கு தாராளம்.. உண்மையான நண்பன் இந்தியா தான்! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு
டெல்லி: பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் மாலத்தீவுக்கு உதவ, மத்திய அரசு நிதியுதவியை வழங்க இருக்கிறது. மாலத்தீவு அதிபர் சீனாவுடன் நெருக்கம் காட்டி வந்தாலும், இந்த நிதியுதவி மூலம் இந்தியா நட்பு ரீதியாக தனது உறவை பலப்படுத்தியுள்ளது.
இந்த உதவியை புரிந்துக்கொண்ட வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல், சரியான நேரத்திற்கு இந்தியா உதவி செய்திருப்பதாக நன்றி தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2019 முதல் இந்திய ஸ்டேட் வங்கி மூலம், மத்திய அரசு சார்பில் மாலத்தீவுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 50 மில்லியன் டாலர் அளவில் இந்த நிதி உதவி இருக்கும். இதற்காக 'கருவூல மசோதாவை' மத்திய அரசு இயற்றியிருந்தது. இந்த மசோதா தற்போது திருத்தப்பட்டிருக்கிறது. அதாவது இந்த ஆண்டும் நிதி உதவியை இந்தியா வழங்கும் என்பதே இதன் பொருள்.
இதற்கு நன்றி தெரிவித்து தனது x பக்கத்தில் கலீல் பதிவிட்டிருப்பதாவது, "சரியான நேரத்தில் செய்யப்பட்டிருக்கும் இந்த உதவியை இந்தியா செய்திருப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் உறவு பலப்பட்டிருக்கிறது. பொருளாதார சிக்கல்களை சரி செய்ய எங்கள் அரசு மேற்கொண்டு வரும் நிதி சீர்திருத்த நடவடிக்கைகளையும் இது ஊக்குவிக்கும்" என்று கூறியிருக்கிறார்.
மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக விடுத்திருந்த அறிக்கையில், "மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அடுத்த ஒரு வருடத்திற்கு மாலத்தீவுக்கான 50 மில்லியன் டாலர் அரசு கருவூல மசோதாவை இந்திய அரசு நீடிக்கிறது. மாலத்தீவுக்கான அவசர நிதியாக தனித்துவமான ஏற்பாட்டின் கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை மாலத்தீவு கடல்சார் ரீதியாக நமக்கு மிக முக்கியமான நாடாகும். ஆனால் தற்போதுள்ள அந்நாட்டு அரசு நம்மிடம் அவ்வளவு சுமூகமாக நடந்துக்கொள்ளவில்லை. இந்தியா ஏராளமான உதவிகளை அந்நாட்டுக்கு செய்திருக்கிறது. குறிப்பாக, ஒரு ராணுவ விமானத்தை வழங்கி, அதை பராமரிப்பதற்கும் ராணுவ வீரர்களை அனுப்பி வைத்திருந்தது. இருப்பினும், அந்நிய நாட்டு ராணுவ வீரர்கள் தங்கள் நாட்டில் இருக்க கூடாது என்று மாலத்தீவு திருப்பி அனுப்பியது.
அதேபோல கடந்த 2023ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டு வந்த கடல்சார் ஆராய்ச்சிக்கு தடையும் விதித்தது. இந்தியா இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததன் மூலம் ஏராளமான புதிய விஷயங்களை கண்டுபிடித்தது. இந்த கண்டுபிடிப்புகள் மனித குல கண்டுபிடிப்புகளாகவே கருதப்பட்டதே தவிர, தன் பெயரை முன்னிறுத்தி நம் அரசு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. இருப்பினும் மாலத்தீவு இதற்கு தடை விதித்தது.
தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கும் முகமது முய்சு, அதிபராக வந்ததிலிருந்து சீனாவுடன் அதிகம் நெருக்கம் காட்டி வந்தார். இந்த நெருக்கம்தான் இந்தியா மீதான மாற்று பார்வைக்கு காரணம் என்றும் சர்வதேச அரசியல் விமர்சகர்கள் விமர்சித்திருக்கின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications