Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துருக்கியை நெறுக்கிய இந்தியா.. அஜர்பைஜானுக்கு ஆப்பு! இனிமே நோ சூட்டிங்.. சினிமா துறை அதிரடி ஆக்சன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில். துருக்கி, அஜர்பைஜான் போன்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தன. இதை அடுத்து வணிகம், சுற்றுலா துறை உள்ளிட்டவற்றில் இந்தியர்கள் இரு நாடுகளையும் புறக்கணித்து வருகின்றனர். அந்த வகையில் இனி இந்திய திரைப்படங்களை துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படமாக்க கூடாது என திரைப்பட வர்த்தக சபையினர் முடிவு செய்துள்ளனர். இது இரு நாடுகளுக்கு மேலும் பாதிப்பை அதிகரிக்கும் என்கின்றனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இதில் ஜெய்ஸ்-இ- முகமது உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் துல்லிய தாக்குதலால் கடும் சேதத்தை சந்தித்தன.

மேலும் மசூத் ஆசாரின் உறவினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். முழுக்க முழுக்க தீவிரவாதிகளை மட்டுமே குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொது மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்து இருந்தது.

India Turkey Azerbaijan

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெற்றிகரமாக நடைபெற்றதாக இந்திய ராணுவம் அறிவித்த நிலையில் எல்லைப் பகுதிகளை திடீரென பாகிஸ்தான் அத்துமீறியது. சீன தயாரிப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் ஆகியவற்றை ஏவி தாக்குதல் முயற்சி நடந்த நிலையில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக தாக்கி அளித்தன. இந்நிலையில், இந்தியா மீதான பாகிஸ்தானின் அத்துமீறலின் போது துருக்கி பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தது. மேலும் அந்நாட்டின் அதிபர் எர்டோகன் கப்பல் மற்றும் விமானம் வழியாக ட்ரோன்கள் ஏவுகணைகள் ஆகியவற்றை கொடுத்து உதவியிருக்கிறார்.

பாகிஸ்தான் அனுப்பிய ஏவுகணைகள் இந்திய படைகளால் தாக்கி அளிக்கப்பட்ட நிலையில் எல்லைப் பகுதிகளில் அதன் எச்சங்கள் மீட்கப்பட்டன. சீனாவும் துருக்கியும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் செயல்பட்டது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. குறிப்பாக அதிக அளவில் துருக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வழங்கி இருந்தது. மேலும் அஜர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து இரு நாடுகள் மீதும் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியர்கள் தாங்களாகவே முன்வந்து இரு நாடுகளையும் பல்வேறு துறைகளில் புறக்கணித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுற்றுலா மூலம் லட்சக்கணக்கானோர் துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு சென்றிருக்கின்றனர். விசா, உணவகங்கள், ஹோட்டல்கள் என பல்வேறு வகைகளில் நான்காயிரம் கோடிக்கும் அதிகமான வர்த்தகம் இரு நாடுகளுக்கும் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு செல்ல வேண்டாம் என பிரபலங்கள் கோரிக்கை விடுத்த நிலையில் முன்பதிவு 20 சதவீதமாக குறைந்தது. மேலும் ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணங்களையும் 250 சதவீதம் அளவுக்கு ரத்து செய்தனர். தொடர்ந்து துருக்கியில் இருந்து அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில் அதனையும் ரத்து செய்வதாக வியாபாரிகள் கூறினர்.

இதனால் சுற்றுலா வர்த்தகம் என இரு பெரும் துறைகளில் துருக்கியும் அஜர்பைஜானும் கடும் நெருக்கடியை சந்தித்தன. இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை தொடர்ந்து துருக்கி மற்றும் அதன் இந்திய திரைப்படங்களை எடுக்கக் கூடாது என இந்திய திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்தியாவில் இருக்கும் அனைத்து மொழி திரைத்துறையினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் துருக்கி மற்றும் அதன் படமாக்கப்படும் நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் இரு நாடுகளுக்கும் இழப்பு ஏற்படும் என்கின்றனர். மேலும் வரும் காலங்களில் ஏற்றுமதி இறக்குமதி என அனைத்து வகையான வர்த்தகங்களையும், கல்வி, சுற்றுலா போன்றவற்றையும் புறக்கணிக்க இந்தியர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் மத்திய அரசும் இது தொடர்பான அறிவிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+