ரஷ்யாவிற்கு ரகசிய டெக்னாலஜியை கொடுக்கிறோமா? வெகுண்டெழுந்த இந்தியா.. என்ன நடந்தது? பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தடை செய்யப்பட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆயுத நிறுவனத்திற்கு முக்கிய தகவல்களை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் நிறுவனம் பகிர்ந்ததாக பிரபல அமெரிக்க நாளிதழ் வெளியிட்ட செய்தி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே நீண்ட காலமாக நல்லுறவு உள்ளது. இந்தியாவின் நம்பகமான நெருங்கிய நட்பு நாடாக பல ஆண்டுகளாக ரஷ்யா நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய விவகாரங்களில் ஒப்பந்தங்கள் உள்ளன. ரஷ்யா தொழில் நுட்ப உதவியுடன் இந்தியாவில் முக்கியமான பல திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

india-denies-reports-that-hal-shared-sensitive-information-with-russian-company

முக்கியமான தகவலை பகிர்ந்ததாக செய்தி

கூடங்குளம் அணுமின் நிலையம் உள்பட பல திட்டங்களை இந்தியா - ரஷ்யா கூட்டு தொழில் நுட்ப உதவியுடன் நடைபெறுகின்றன. சமீப காலமாக அமெரிக்காவுடன் இந்தியா இணக்கம் காட்டினாலும் ரஷ்யா - இந்தியா உறவு என்பது அசைக்க முடியாததாகவே உள்ளது. இத்தக சூழலில்தான், அமெரிக்காவின் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அண்மையில் பரபரப்பு செய்தி ஒன்று வெளியானது.

அதாவது, இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ரஷ்யாவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ராணுவ தொழில் நுட்பத்தை பகிர்ந்ததாதக கூறப்பட்டு இருந்தது. இத்தனைக்கும் அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது. மிக முக்கியமாக பிரிட்டன் தொழில் நுட்பத்தை ஹெச்.ஏ.எல் நிறுவனம் ரஷ்ய நிறுவனத்திற்கு திருப்பி விட்டதாகவும் இதன் மதிப்பு 2 மில்லியன் டாலர் இருக்கும் எனவும் அதனைத்தொடர்ந்து 14 மில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதியையும் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்திய வெளியுறவுத்துறை மறுப்பு

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட இந்த செய்தி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. உக்ரைன் - ரஷ்யா போருக்கு நடுவே இப்படியான ஒரு செய்தி வெளியாகியது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஆனால், இந்தியா இத்தகைய தகவல்களை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது:-

ரஷ்யாவின் ஆயுத நிறுவனத்திற்கு மிக முக்கியமான தொழில் நுட்பத்தை இந்தியா வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியை நிராகரிக்கிறோம். அரசியல் காரணங்களுக்காக உண்மைகளை திசை திருப்பி தவறான தகவல்களை அளித்து பிரச்சினைகளை உருவாக்க முயற்சிப்பது போல இது உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிந்துஸ்தான் விளக்கம்

சர்வதேச முக்கியமான விஷயங்களில் வர்த்த கட்டுப்பாடுகள் மற்றும் இறுதி பயனருக்கான உறுதிமொழிகளை பின்பற்றுவதில் ஹிந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் உறுதியாக இருப்பதாக அத்துறை நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். டாசால்ட் நிறுவனத்துடனான 7.3 பில்லியன் டாலர் ஒப்பந்தம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு சிக்கலான சர்வதேச ஒத்துழைப்புகளில் கூட ஹிந்துஸ்தான் ஏரோநெட்டிக்கல் நிறுவனம் நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+