வாகா எல்லையை முழுநேரமும் திறக்க இந்தியா-பாகிஸ்தான் முடிவு
வாகா: வாகா எல்லைப்பகுதியை வர்த்தகத்திற்காக முழுநேரமும் திறந்துவைத்திருக்க இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
இதுதொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மாவும், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் குர்ராம் தஸ்தகீர் கானும் கலந்துகொண்டனர்.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் வர்த்தகத்துறை அமைச்சர்கள் இடையே 20 மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையே ஆண்டு முழுவதும் வர்த்தகம் நடத்த அனுமதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மிகவும் நட்பு நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு வழங்குமாறு பேச்சுவார்த்தையின்போது ஆனந்த் சர்மா வலியுறுத்தியதாகவும் அதனை பாகிஸ்தான் தரப்பில் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆனந்த் சர்மா, இருநாடுகளுக்கிடையே பாரபட்சமின்றி வர்த்தகம் நடைபெற பேச்சுவார்த்தையில் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
மேலும், இருதரப்பிலும் அரசால் பரிந்துரை செய்யப்படும் வங்கிகளுக்கு அனுமதி வழங்க கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக ஆனந்த் சர்மா கூறினார்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications