அதிகாலையிலேயே அட்டகாசம் செய்யும் பாக்..பதிலடி கொடுக்கும் இந்தியா! பற்றி எரியும் இஸ்லாமாபாத்!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: நேற்று இரவில் இருந்து இந்தியாவை நோக்கி பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களைக் கொண்டு தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானை சேர்ந்த முக்கிய நகரங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து வெடிக்கும் சத்தங்களும், சைரன் சத்தமும் தொடர்ந்து கேட்கின்றன. TIMES NOW தகவலின்படி, ஜம்மு எல்லைப் பகுதியில் தொடர்ந்து வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் காரணமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த நிலையில் தீவிரவாதிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படைகள் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கப்பல் படை இணைந்து நடத்திய இந்த கூட்டு ஆபரேஷனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பாபல்பூர், முஷாபர்பாத், கோட்லி, மூர்தி ஆகிய பகுதிகளில் லஸ்கர் இ தொய்ஃபா, ஜெய்ஸ் இ முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தீவிரவாத அமைப்புகளில் தலைமையகங்கள், ஆயுதக் கிடங்குகள் தாக்கி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

india pakistan war international

இந்தியாவின் இந்த திட்டமிட்ட துல்லிய தாக்குதலில் 70 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் இந்தியாவின் பதிலடி தாக்குதல் போர் நடவடிக்கை தான் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் புதன்கிழமை காலையில் இருந்தே பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இருந்து இந்தியை நோக்கி ஏவுகனை தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் அதனை தாக்கி அழித்தன.

தொடர்ந்து பாகிஸ்தானை நோக்கி இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், அதிகாலை நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து மோர்டார் ஷெல்கள், துப்பாக்கிச் சூடு மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் தகுந்த பதிலை வழங்கி வருகிறது. இந்திய ராணுவம், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தும் இடங்களை சரியாக கண்டறிந்து துல்லியமான முறையில் பதிலடி கொடுத்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறையின் தகவலின்படி, பாகிஸ்தானின் அத்துமீறலை சந்திக்க இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை முழுமையாக தயார் நிலையில் உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறது. கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் அனைத்தும் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. இடம் பெயர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் தொடர்ச்சியான அத்துமீறல்களுக்கு எதிராக இந்தியா தீர்க்கமான பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாகவும், எந்த வித அத்துமீறலையும் சகிக்க மாட்டோம் எனவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானின் முக்கிய நகரங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. கராச்சி, பெசாவர், முசபராபாத், இஸ்லாமாபாத் ஆகிய பகுதிகளில் தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் நடத்தி வருகிறது. குறிப்பாக 10 ஏவுகணைகளை வீசி கராச்சி துறைமுகம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்லாமாபாத்தில் ஏவுகணைகள் விழுந்ததில் 16 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+