ஆப்கனில் 8 மாதப் போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்த அலெக்சிஸ் பிரேம்குமார்...!
காபூல்: ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில், ஜே.ஆர்.எஸ். தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஹெராத் மாகாணத்தில் பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார் .

ஜெயலலிதா கடிதம்
ஜூன் 4: பாதிரியாரை பத்திரமாக மீட்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
அலெக்சிஸ் பிரேம்குமாரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.

மீட்க முயற்சி
ஜூன் 5: இதைத் தொடர்ந்து பாதிரியாரை மீட்க ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

மூவர் கைது
ஜூன் 5: பாதிரியார் கடத்தப்பட்டு, 4 நாட்களுக்குப் பிறகு, அவரது கடத்தல் தொடர்பாக தாலிபான் உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி கேள்வி
ஆகஸ்ட் 5: தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன நிலையில், அவரை மீட்க அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்து ராஜ்யசபாவில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.

பல கட்ட முயற்சி
இதற்கு பதிலளித்துப் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வரராஜ் தமிழகத்தைச் சேர்ந்த பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை மீட்க அனைத்துவித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் சுஸ்மா தெரிவித்தார்.

8 மாதங்களுக்குப் பின்ன
எட்டு மாதங்களாக அவரை மீட்க காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், ஆப்கன் அரசுடன் இணைந்து பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.

குடும்பத்தினர் நன்றி:
டெல்லி வந்த பிரேம்குமாரை வரவேற்க, அவரது உறவினர்கள் 3 பேர் விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி சென்றனர். தனது மகனை மீட்க நடவடிக்கை எடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications