விஸ்கி விலை குறைய போகுது! இங்கிலாந்துடன் எளிமையாகும் வணிகம்! வேறென்ன எல்லாம் விலை குறையும்? பாருங்க
லண்டன்: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக இருக்கிறது. எனவே இதன் மூலம் அங்கிருந்து வரும் விஸ்கி உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும். அதேபோல இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி குறையும்.
பிரிட்டன், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு 4 நாட்கள் பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்கிறார். இன்று அவரது பயணம் தொடங்கியுள்ளது. நாளை பிரிட்டனில் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் அவர் முன்னிலையில் கையெழுத்தாகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 2030 ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டனில் இருந்து வரும் 90 சதவீத பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்கும். இதன்படி, விஸ்கி மற்றும் ஜின் மீதான வரி 150 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறைக்கப்படும். பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு 10 ஆண்டுகளில் 40 சதவீதமாக இருக்கும். கார்களுக்கான வரி 100 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. மேலும் அழகு சாதனப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், சால்மன் மீன், சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களின் மீதான வாியும் குறையும்.
எதெல்லாம் விலை குறையும் என்பது குறித்து இந்திய வர்த்தக அமைச்சகம் சில தகவல்களை வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியப் பொருட்களுக்கு 99 சதவீதம் வரி இல்லாத அணுகலை இங்கிலாந்து நமக்கு கொடுக்கும். இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் எவ்வாறு பயனளிக்கும் என்றால், தற்போது 4 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை உள்ள ஜவுளி, காலணி, ஆபரணங்கள், மரச்சாமான்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், ரசாயனங்கள், இயந்திரங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற இந்திய ஏற்றுமதிகளுக்கு இங்கிலாந்தில் வரி இருக்காது.
இந்திய வர்த்தக அமைச்சகத்தின் தகவல்படி, வணிகத்திற்காக வருபவர்கள், ஒப்பந்த சேவை வழங்குநர்கள், யோகா பயிற்றுவிப்பாளர்கள், சமையல்காரர்கள் மற்றும் இசைக்கலைஞா்கள் ஆகியோருக்கு இங்கிலாந்தில் தற்காலிகமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரிட்டன் நிறுவனங்களுக்கு இந்திய பொது கொள்முதல் சந்தையில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications