அமெரிக்கா: ரூம் வாடகை கேட்ட இந்தியப் பெண் டிரக்கில் 5 கிமீ இழுத்துச் செல்லப்பட்டு கொலை
பாஸ்டன்: அமெரிக்காவில் இந்திய-அமெரிக்கரான காஞ்சன்பென் பட்டேல் என்பவரை வாலிபர் ஒருவர் தனது டிரக்கால் மோதி அவரை தனது வாகனத்தில் சுமார் 5 கிமீ இழுத்துச் சென்றதில் அவர் பலியானார்.
அமெரிக்காவின் மாசசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள வ்ரிந்தம் மாவட்டம் இப்ஸ்விச்சில் உள்ளது ஆர்பர் இன் மோட்டல். அங்கு அண்மையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியரான காஞ்சன்பென் பட்டேலும்(58) அவரது கணவரும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ரூம் வாடகை கொடுக்காதது தொடர்பாக அவர்களுக்கும் நார்உட்டைச் சேர்ந்த மோசஸ் அக்லோக்கிற்கும்(22) இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து டிரக்கில் கிளம்பிய மோசஸ் காஞ்சன்பென் மற்றும் அவரது கணவரை வாகனத்தால் இடித்தார். மேலும் காஞ்சன்பென்னை தனது வாகனத்தில் சுமார் 5 கிமீ வரை தர தரவென இழுத்துச் சென்றார். இதில் காஞ்சன்பென் பலியானார். பின்னர் காஞ்சன்பென்னின் உடல் ஒரு போர்டு வாகனத்திற்கு அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மோசஸை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications