பேருதான் டிராகன்! கருவை போல் சுமந்து வந்த விண்கலம்! கேப்சூலை திறந்ததும் சுபான்ஷு சுக்லா செய்தது என்ன
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அந்த விண்கலத்தில் இருந்து சுக்லா வெளியே வந்த போது முகத்தில் புன்னகையுடன், அங்கிருந்தோரை பார்த்து கையசைத்தபடியே வெளியே வந்தார்.

சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அவர்கள் அதீத வெப்பத்தை கடந்து வர வேண்டியிருந்ததால் அவர்களின் உடலை வெப்பம் தாக்காத வகையிலான பிரத்யேக உடையை அணிந்திருந்தனர்.
சுமார் 23 மணி நேர பயண நேரத்திற்கு ஸ்பாஷ் டவுன் முறையில் இந்திய நேரப்படி மாலை 3.15 மணிக்கு வந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலம் கடலில் இறங்கியது.
அப்போது அங்கு தயாராக இருந்த கடற்படை வீரர்கள், அந்த கேப்சூலை கப்பலுடன் இணைத்தனர். பின்னர் அந்த விண்கலம் பல்வேறு நிலைகளில் பயணம் செய்து வந்தமையால் கதவை திறக்கும் போது வீரர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் தண்ணீர் பீய்ச்சி கழுவப்பட்டது.
சூரியனின் அதீத வெப்பத்தால் அந்த கேப்சூலின் வெளிப்புறம் உருகி நிறமே மாறியிருந்தது. இதையடுத்து அந்த கேப்சூலின் வெளிப்புற கதவை நாசா விஞ்ஞானிகள் திறந்தனர். பின்னர் உள்புற கதவை வீரர்கள் திறந்தனர். அப்போது உள்ளே சிரித்த முகத்துடன் நலமாக இருந்த வீரர்களை அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அவர்களில் முதலில் அமெரிக்காவின் பெக்கி விட்சன் என்ற வீராங்கனை வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து இந்திய வீரர் சுக்லா வெளியே வந்தார். அப்போது அவர் சிரித்த முகத்துடன் கைகளை அசைத்தபடியே வெளியே வந்தார். அவரை நாசா விஞ்ஞானிகள் கைத்தாங்கலாக பிடித்து அழைத்துச் சென்றனர்.
அந்த கேப்சூல் கர்ப்பப்பையை போல் இந்த 4 பேரையும் தாங்கிக் கொண்டு வந்தது. அவர்கள் வெளியே வந்த தருணம் கிட்டதட்ட பிரசவம் போல் மறுபிறவி மாதிரி இருந்தது. சுக்லா பயணித்த விண்கலம் பூமியின் வளிமண்டல பகுதியில் வந்துவிட்டால் ஆபத்து ஏதும் இல்லை என்று அர்த்தம். எனினும் ஸ்பாஷ் டவுன் ஆகும் போது எந்த ஆபத்தும் இல்லாமல் அந்த விண்கலத்தை கடற்படை வீரர்கள் மீட்பது முக்கியமானது. இவை அனைத்தும் சுக்லா விவகாரத்தில் நல்லபடியாக நடந்து முடிந்தது.
சுக்லா உள்ளிட்ட 4 பேரும் வந்ததும் அவர்களது ரத்த அழுத்தம், நாடி துடிப்பெல்லாம் சோதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 7 நாட்களுக்கு அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்படுவர். பின்னர் அவர்களுக்கு மனரீதியிலான கவுன்சலிங் கொடுக்கப்படும்.
முன்னதாக அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அனுப்பின. இந்த விண்கலத்தில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் சுக்லா உரையாடினார். சுக்லா உள்ளிட்டோர் 17 நாட்கள் அங்கு தங்கியிருந்தனர். பின்னர் நெல், காராமணி, எள், கத்தரி, தக்காளி உள்ளிட்ட 6 வகையான விதைகளை சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். அங்கு அவர் சிறப்பு பெட்டிகளில் வைத்து முளைக்கச் செய்தார்.
பாசி பன்றிக்குட்டி என்ற நுண் உயிரியை ஷுபன்ஷு சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. நுண்நோக்கி உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். இந்த நுண் உயிரி விண்வெளியில் எவ்வாறு வளர்கிறது என்பது குறித்தும் சுக்லா ஆய்வு செய்தார்.நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இந்த பாசி வகைகள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்து அவர் ஆய்வு நடத்தினார். மைக்ரோஅல்கா என்ற பாசி வகையையும் சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். ஒட்டுமொத்தமாக 60 வகையான ஆய்வுகளை செய்தார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுக்லா பெறுகிறார். ராகேஷ் சர்மாவுக்கு அடுத்து விண்வெளி பயணம் மேற்கொண்ட இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுக்லா பெற்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications