கூட்டு செக்ஸ்: மறுத்த ஈரானிய பெண்ணை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிய இந்திய தம்பதி!
வெனிஸ்: இத்தாலியில் ஈரானிய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த இந்திய தம்பதியர், அந்த பெண்ணின் சடலத்தை சூட்கேசில் எடுத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலத்தை கண்டுபிடித்த போலீசார் கொலைக்கு காரணமான இந்திய தம்பதியரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கைதான தம்பதியரின் பெயர் இந்திய தம்பதிகள் ராஜேஷ்வர் சிங் (29) மற்றும் கங்காதீப் கவுர் (30) . இத்தாலியின் மிலன் நகரில் வசித்துவரும் இவர்கள் ஆடை வடிவமைப்பாளர்களாக உள்ளனர்.
இவர்களிடம் ஆடை வடிவமைப்பாளராக பயிற்சி பெற வந்த ஈரானை சேர்ந்த மெஹ்பாப் அஹட்சவோஜி (29). இந்தப் பெண்ணும் அவர்களுடனே ஒன்றாக தங்கியிருந்திருக்கிறார்.
பாலியல் பலாத்காரம்
அப்போது மெஹ்பாப்பை தங்களுடன் செக்ஸில் ஈடுபடும்படி அந்தத் தம்பதி வற்புறுத்தவே, இதற்கு மெஹ்பாப் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து கட்டாயமாக பலாத்காரம் செய்த அந்த தம்பதியர் இருவரும் மெஹ்பாப்பின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது நிர்வாண உடலை ஒரு சூட்கேசில் அடைத்து லெக்கோ நகரில் உள்ள ஏரியில் வீச ரயிலில் எடுத்து சென்றுள்ளனர்.
கால்வாயில் சடலம்
ஆனால், அங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், மீண்டும் வெனிஸ் நகருக்கு ரயிலில் எடுத்துச் செல்ல தீர்மானித்தனர். பிறகு அங்கிருந்த கால்வாயில் வீசிவிட்டு திரும்பிவிட்டனர். ஒரு வாரம் கடந்த நிலையில் மெஹ்பாப்பின் சடலமானது லிடோ தீவு அருகே போலீசார் கண்டெடுத்தனர்.
கண்காணிப்பு கேமராவில்
கைரேகை நிபுணர்கள் அவரது சடலத்தை சோதனை நடத்தினர். இதில் கொலையாளிகளின் கைரேகை பற்றிய விவரம் தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் ராஜேஷ்வர் சிங் மற்றும் கங்காதீப் கவுர் ஆகிய இருவரும் சூட்கேசுடன் வந்தது பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தம்பதி கைது
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முதலில் மறுப்பு தெரிவித்த அவர்கள், பிறகு செய்த குற்றத்தை
ஒத்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications