கலிபோர்னியாவில் இந்திய பல் மருத்துவ மாணவி சுட்டுக் கொலை
அல்பேனி: அமெரிக்காவில் பல் மருத்துவப் படிப்பு படித்து வந்த இந்திய மாணவி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வந்தவர் ரந்தீர் கவ்ர்(37). அவர் அல்பேனி பகுதியில் வீடு எடுத்து தங்கி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்தார்.

அவர் கடந்த 8ம் தேதி மதியம் எல் சாப்ரண்ட் பகுதியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். வீடு திரும்பிய அவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை ரந்தீர் கல்லூரிக்கு வராததால் அவருடன் படிப்பவர்கள் அவரின் உறவினருக்கு போன் செய்து கேட்டனர். அவரது உறவினர் ரந்தீரின் வீட்டுக்கு சென்றபோது அவர் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
ரந்தீரின் வீட்டுப் பகுதியில் கடந்த 8ம் தேதி யாராவது சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்றினார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கொலையே நடக்காமல் இருந்த அல்பேனி பகுதியில் ரந்தீர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரந்தீரின் வீட்டுக் கதவை உடைத்து யாரும் நுழையவில்லை. அவரது உடைமைகள் அவரது வீட்டில் இருந்து 3.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குப்பைத் தொட்டியில் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications