காசா போரில் இந்தியர் மரணம்! ஓடும் காரில் அரங்கேறிய கொடூர தாக்குதல்.. Ex இந்திய ராணுவ வீரர் என தகவல்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நடந்த தாக்குதல் ஒன்றில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே மோதல் போக்கே தொடர்ந்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஏழு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது.

காசா பகுதியில் இருக்கும் ஹமாஸை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை போர் ஓயாது என்பதை இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
எச்சரிக்கை: இதற்கிடையே அடுத்த கட்டமாக காசாவின் தெற்கு பகுதியில் உள்ள முக்கிய நகரான ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு இருந்தது. ரஃபாவில் அதிகளவில் பொதுமக்கள் வசிப்பதால் அங்குத் தாக்குதலை ஆரம்பித்தால் அது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா தொடங்கி பல்வேறு உலக நாடுகளும் எச்சரித்துள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதலை நடத்துவதில் உறுதியாக உள்ளது.
ஏற்கனவே ரஃபா மீது இஸ்ரேல் முதற்கட்ட தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள், இதற்கிடையே ஐநா சபையில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் பயணித்த வாகனம் ரஃபாவில் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் இதில் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் ஏற்பட்டதில் இருந்து அங்குச் சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தியர் உயிரிழப்பு: அவர் ஐநா பாதுகாப்புத் துறையின் ஊழியர் என்பது தெரிய வந்துள்ளது. உயிரிழந்த அந்த நபரின் பெயர் உள்ளிட்ட இதர தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.. இருப்பினும் அவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கூறப்படுகிறது. கடந்த அக். மாதம் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் தொடங்கிய நிலையில், கடந்த 7 மாதங்களில் முதல்முறையாகச் சர்வதேச ஐநா ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது பணியாளர் கொல்லப்பட்டதற்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா பணியாளர்கள் மீதான தாக்குதல்களையும் கண்டிப்பதாகவும் இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐநா வலியுறுத்தி உள்ளது. மனிதாபிமான உதவிகளைச் செல்ல செல்வோரின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உடனடியாக அங்குப் போர்நிறுத்தத்தைக் கொண்டு வந்து அனைத்து பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
என்ன நடந்தது: இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த கேள்விக்கு ஐநா தரப்பில், "இந்த விபத்து மிகச் சமீபத்தில் தான் நடந்தது என்பதால் எங்களிடம் அனைத்து தகவல்களும் இல்லை. இது தொடர்பாக விரைவில் விரிவான ரிப்போர்ட்டை வெளியிடுகிறோம். அந்த கார் கான்வாயில் சென்று கொண்டு இருக்கும் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்: இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியதில் இருந்தே காசா பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு காசாவில் தாக்குதல்கள் முடிந்துவிட்ட நிலையில், தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுமே ரஃபாவில் தாக்குதல் நடத்த வேண்டாம் என்றே எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications