மஸ்கட், கத்தார், அல் அய்னில் இந்திய சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
மஸ்கட்: மஸ்கட், கத்தார், அல் அய்ன் ஆகிய இடங்களில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மஸ்கட்டில் இந்திய சுதந்திர தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. புதிதாக இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ள இந்திர மணி பாண்டே தூதரக வளாகத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையினை வாசித்தார். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அல் அய்ன்
15.08.2015 அன்று அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் 69வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்மையத்தின் தலைவர் திரு. ஜாய் தனங்காடன் தேசிய கோடியேற்றினார். இந்நிகழ்ச்சிக்கு மையத்தின் துணைச் செயலாளர் நாச்சிக்குளம் திரு. அசாலி அஹமது அப்துல் சுக்கூர் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட இந்திய சமூக மையத்தின் முன்னால் தலைவர்களும், பொதுச் செயலாளர்களும் இந்திய சுதந்திர போராட்டம் பற்றியும், இன்னுயிர் தந்த தியாக வீரர்கள் பற்றியும் உரையாற்றினர்.

வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் இந்திய அமீரக மாண்புகள் குறித்தும் உரை நிகழ்த்தினர். பெரும் திரளாக வந்திருந்த அல் அய்ன் வாழ் இந்திய சமூக மக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. முன்னதாக 14.08.2015 அன்று மாணவர்களுக்கான கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் மையத்தின் துணைத் தலைவர் திரு. தஷ்வீர் நன்றி கூறினார்.
கத்தார்
கத்தார் தலைநகர் தோஹாவில் இந்திய தூதரகத்தின் சார்பில் இந்திய கலாச்சார மையத்தில் இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்திய தூதர் சஞ்சிவ் அரோரா இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். தேச பக்திப்பாடல்களை பள்ளி மாணவ, மாணவியர் பாடினர். விழாவில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், இந்திய சமுக்கத்தினர் பங்கேற்றனர்.

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications