ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீது கொலை வெறித் தாக்குதல்
கான்பெரா: ஆஸ்ரேலியாவில் இந்தியர் ஒருவர் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரஞ்ஜித் சித்து என்பவர் ஆஸ்திரேலியாவில் பாதுகாவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மெல்போர்னில் உள்ள ரிச்மான்ட் பகுதி வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அங்கு வந்த மர்மநபர் ஒருவர் ஆயுதங்களால் ரஞ்ஜித்தை தாக்கியுள்ளார். இதனால் ரஞ்ஜித் சித்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரஞ்ஜித் சித்து தலையில் 10 தையல்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து ரஞ்ஜித் சித்து கூறுகையில், இந்த தாக்குதல் தூண்டுதலில் பேரில் நடத்தப்பட்டது இல்லை. அந்த நபர் என்னிடம் வந்து நீங்கள் போலீஸாரா என இரண்டு முறை கேட்டுவிட்டுச் சென்றார். நான் போலீஸ் இல்லை என்று அவரிடம் கூறினேன். தொடர்ந்து, மூன்றாவது முறையும் என்னிடம் வந்த அவர், திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து என்னைத் தாக்கத் தொடங்கிவிட்டார். நான் உயிருக்கு பயந்து ஓடியபோதிலும், அவர் என்னை துரத்தி வந்து தாக்கினார் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
