சிங்கப்பூரில் பேருந்தில் முன்சீட்டில் இருந்த பெண்ணிடம் சில்மிஷம்: இந்தியருக்கு சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் வேலை பார்த்து வருபவர் சீதாராம் ரமேஷ்(32). அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி சிங்கப்பூரில் பேருந்தில் சென்றுள்ளார். அவர் பேருந்தில் பல இருக்கைகளை மாற்றி பின்னர் 39 வயது பெண்ணுக்கு பின்னால் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னால் இருந்து அவர் தனக்கு முன் இருக்கையில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். ரமேஷ் இதுபோன்று அந்த பெண்ணுக்கு மேலும் 2 முறையும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

அந்த பெண்ணின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர். வழக்கு நீதிபதி ஜஸ்விந்தர் கௌர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரமேஷ் தனது குற்றங்களில் ஒன்றை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 3 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரமேஷின் வழக்கறிஞர் முகமது பைரோஸ் கூறுகையில்,
ரமேஷ் தனது சொந்த ஊரில் கடன் தொல்லை இருந்ததால் தான் பணம் சம்பாதிக்க இங்கு வந்தார். தற்போது அவருக்கு வேலை போக உள்ளது. மேலும் அவர் நாடு கடத்தப்படலாம் என்றார்.












Click it and Unblock the Notifications