51 வயது தாத்தா செய்யுற வேலையா இது? இந்தியரை நாடு கடத்த.. கனடா நீதிமன்றம் உத்தரவு!
ஒட்டவா: தனது பேர குழந்தையை பார்ப்பதற்காக தற்காலிக விசாவில் கனடாவுக்கு சென்ன 51 வயது இந்தியர் ஒருவர், மோசமான குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். இதனையடுத்து அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும், மீண்டும் அவர் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றுதான் கனடா. 18.58 லட்சம் இந்தியர்கள் கனடாவில் வசிக்கின்றனர். இது அந்நாட்டு மொத்த மக்கள் தொகையில் 5.1% ஆகும். தொடர்ந்து கனடாவுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சில அமைப்புகள் இந்தியர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன.

இப்படி இருக்கையில் இந்த எதிர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக இந்தியர் ஒருவரின் நடத்தை அமைத்துவிட்டது. ஜகஜீத் சிங்(51) எனும் நபர் தனது பேரக்குழந்தையை பார்ப்பதற்காக 6 மாத தற்காலிக விசா மூலம் கனடாவுக்கு சென்றிருக்கிறார். நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்த பின்னர் சில நாட்கள் தங்கியிருந்தார். டிச.31ம் அவருடைய விசா முடிவடைகிறது. எனவே டிச.30ம் தேதி இந்தியா திரும்புவதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்.
இப்படி இருக்கையில், ஒரு நாள் உயர்நிலைப் பள்ளியின் புகைபிடிக்கும் பகுதிக்கு சென்ற ஜகஜீத், அங்குள்ள இளம் மாணவிகளிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறார். ஆங்கிலம் தெரியாத நிலையிலும் அவர்களுடன் பேச முயன்று சில புகைப்படங்களையும் எடுக்க அனுமதி கோரியுள்ளார். மாணவிகளும் வெறும் புகைப்படம்தானே என்று நினைத்து அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள். புகைப்படம் எடுத்த ஜகஜீத், சும்மா இருக்காமல் அவர்களிடம் பாலியல் ரீதியாக சைகை காட்டி மாணவியின் மீது கை போட்டு இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டா லின் லெஸ்சிசிஸ்கி, உயர்நிலை பள்ளி வளாகத்தில் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், நீங்கள் அங்கே இருந்திருக்கிறீர்கள். மாணவிகளிடம் தவறாக நடந்து இருக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி சிறிய தண்டனை கொடுத்திருக்கிறார்.
பிரச்சனை இது உடன் முடியவில்லை. ஓரின நாட்கள் சிறை தண்டனைக்கு பிறகு, பிணையில் வெளியே வந்த அவர், மற்றொரு புகாரில் சிக்கினார். இதனை எடுத்து இந்த வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டது.
விசாரணையில் சிங்கை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும், கனடாவுக்குள் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட மாணவிகள், தாங்கள் கடுமையாக மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இவர் புதியதாக கனடாவுக்கு வந்திருந்தாலும் எங்களிடம் நடந்து கொண்ட விதம், வயதில் மூத்தவர்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் பார்வையை பாதித்திருக்கிறது என்று தங்களுடைய வேதனையை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே இந்தியர்களுக்கு எதிராக கனடாவில் பல அமைப்புகள் பேரணிகளையும், போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், தற்போது இந்தியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
-
இந்திய மாம்பழங்கள் வேண்டாம்.. அதிரடியாக தடை விதித்த ஜப்பான்! பின்னணியில் ஷாக் காரணம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications