இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை.. ஜோர்டன் ராணுவத்தால் நேர்ந்த சோகம்!

Subscribe to Oneindia Tamil

அமான்: இந்தியாவிலிருந்து சுற்றுலா விசா மூலம் ஜோர்டனுக்கு சென்றவர், அங்கிருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைய முயன்றதாகவும், இந்த சம்பவத்தின்போது ஜோர்டன் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்தவரின் உடலை பாதுகாப்பாக கொண்டு வருவது தொடர்பாக ஜோர்டன் அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

Jordan Israel

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தாமஸ் கேப்ரியல் பெரேரா. இவர் தனது நண்பர் எடிசனுடன் ஜோர்டனுக்கு டுரிஸ்ட் விசாவில் கடந்த பிப்.5ம் தேதி சென்றிருக்கிறார். அங்கிருந்து இருவரும் சேர்ந்து இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, இவர்கள் மீது ஜோர்டன் ராணுவ துருப்புகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே தாமஸ் உயிரிழந்திருக்கிறார். எடிசன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எடிசன் கேரளா வந்து சேர்ந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து ஜோர்டன் அமானில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து தாமஸ் குடும்பத்திற்கு கடிதம் வந்திருக்கிறது. இதில் நடந்த விஷயம் விவரமாக சொல்லப்பட்டிருக்கிறது. கர்காக் மாவட்டத்தில் ஜோர்டன் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்றதாகவும், பாதுகாப்பு படையினர் எவ்வளவோ தடுக்க முயன்றும் கேட்காமல் இருந்ததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

துப்பாக்கிச்சூட்டில் குண்டு தாமஸின் தலையில் பாய்ந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவரது உடல் அடையாளம் காணப்பட்ட பின்னர், இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் என தூதரக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். ஜோர்டனில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தியாவிலிருந்து இஸ்ரேல் சென்றிருப்பவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. இப்போது போர் நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இருப்பினும் உள்ளூர் குழுக்களிடையே மோதல் நீடித்து வருகிறது. எனவே, ஜோர்டன் அரசும் வன்முறை தங்கள் நாட்டுக்குள் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+