சிங்கப்பூரில் குழந்தைகள் முன்பு மனைவியை கத்தியால் குத்திய இந்தியருக்கு 10 மாதம் சிறை
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தனது மனைவியை கத்தியால் குத்திய 29 வயது இந்திய வம்சாவளி நபருக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதியில் வசித்து வந்தவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சுரேஷ் டேவிட் நரசிம்மலு(29). அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது மனைவி வசந்த குமாரி(30), 7 மற்றும் 5 வயதான மகன்களுடன் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார்.
கடைக்கு செல்லும் வழியில் சுரேஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தனது பையில் இருந்த ஸ்விஸ் கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் குத்தினார். குழந்தைகள் கண் முன்பு மனைவியை கத்தியால் குத்திவிட்டு அவர் டாக்சியில் தப்பியோடிவிட்டார்.
போலீசாருக்கு வசந்தா தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். சுரேஷும், வசந்த குமாரியும் விவாகரத்து பெற உள்ளனர். வசந்த குமாரியை குத்திய வழக்கில் சுரேஷுக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தில் சுரேஷின் வழக்கறிஞர் கூறுகையில்,
சுரேஷ் அவரது மனைவியை வேண்டும் என்றே கத்தியால் குத்தவில்லை. வசந்தா தான் வாக்குவாதத்தை துவங்கினார். வசந்தா வேறு ஒரு ஆணுக்காக தனது கணவரை ஏமாற்றிச் சென்றதை அவரால் தாங்க முடியவில்லை. மேலும் வசந்தா தன்னுடன் இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றதுடன் சுரேஷை அவர்களை பார்க்கவிடுவது இல்லை என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications