6வது முறையாக இஸ்ரேல் பிரதமர் ஆனார் நெதன்யாகு.. “இணைந்து பணியாற்றுவோம்” பிரதமர் மோடி வாழ்த்து!
ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றுக்கொண்டார். ஏற்கனவே 5 முறை இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்துள்ள நெதன்யாகு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார். இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக இன்று (டிசம்பர் 29) பதவியேற்றார். 73 வயதான நெதன்யாகு, ஏற்கனவே இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்தவர்.
இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு தனிப்பெரும்பான்மையுடன் பதவியேற்றுள்ளதன் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளாக இஸ்ரேலில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

நெதன்யாகு வெற்றி
இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இஸ்ரேலில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் இது. இந்தத் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு - யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி, மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது. எதிர்த்துப் போட்டியிட்ட யாயிர் லாபிட் கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே பெற்றது.

நம்பிக்கை வாக்கெடுப்பு
நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதன் மூலம், பெரும்பான்மையுடன் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நீண்டகால பிரதமர்
இதில் மொத்தம் உள்ள 120 உறுப்பினர்களில் 63 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார். இதையடுத்து, 1996 - 1999, 2009 - 2021 என இஸ்ரேலின் நீண்ட கால பிரதமராக பதவி வகித்த நெதன்யாகு, அந்நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து
இதனைத்தொடர்ந்து இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றுள்ள பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு அரசாங்கத்தை அமைப்பதற்காக மனமார்ந்த வாழ்த்துகள். நமது கூட்டாண்மையை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவோம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications