தேர்வில் முறைகேடு- துபாயில் இந்திய மாணவி 17வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
துபாய்: பள்ளி தேர்வில் முறைகேடு செய்து பிடிபட்ட இந்திய மாணவி, 17வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
துபாயில் உள்ள ஜுமேரா லேக்ஸ் டவர் கட்டிடத்தின் 17வது மாடியில் வசித்து வரும் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் கடந்த வெள்ளியன்று மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கட்டிடத்தை சுத்தம் செய்த வங்காளதேசத்தை சேர்ந்த பணியாள், சிறுமியின் சடலம் ஒன்று கிடப்பதாக அளித்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சடலத்தைல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தப் போலீசார், மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அச்சிறுமி அக்கட்டிடத்தின் 17வது மாடியில் வசித்து வருபவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், சம்பவம் நடந்த அன்று மாணவி தனது பள்ளியில் நடந்தத் தேர்வில் முறைகேடு செய்ததும், அதனை ஆசிரியர் கண்டித்ததாகவும், அம்மாணவி சஸ்பெண்ட் செய்யபப்ட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சஸ்பெண்ட் ஆன மாணவி வீட்டிற்கு வந்து மிகவும் சோகமாக இருந்துள்ளார். தான் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகரம் தனது பெற்றோருக்கு பள்ளியின் சார்பில் தெரிவிக்கப் பட்டு விட்டதால், தனது அறைக்குள் கதவைச் சாத்திக் கொண்டு இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது அறை பால்கனி வழியாக அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவி தற்கொலை செய்து கொண்ட தகவல், போலீசார் மூலமே பெற்றோருக்குத் தெரிய வந்துள்ளது. தற்போது மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்திற்குக் காரணம் பள்ளித் தேர்வில் முறைகேடு செய்து மாட்டியது தானா அல்லது வேறுகாரணமா என்பது குறித்து துபாய் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications