தாய்லாந்தில் 2 இந்திய டூரிஸ்டுகளிடம் ரூ.62,000, செல்போன், கிரெடிட் கார்டுகள் கொள்ளை
பாங்காக்: தாய்லாந்தில் 2 இந்திய சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகேயன் கிருஷ்ணன்(36) மற்றும் அவரது நண்பர் காதர் பாஷா(40) ஆகியோர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள பட்டயா கடற்கரையில் அவர்கள் நடந்து சென்றபோது ஒரு தாய்லாந்து பெண் அவர்களை அணுகி பணம் கொடுத்தால் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஒரு விலையை நிர்ணயித்த பிறகு கார்த்திகேயன், பாஷா ஆகியோரை அப்பெண் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு அழைத்துச் சென்று அதற்குள் ஏறுமாறு தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் ஏறியவுடன் அவர்களை சற்றுநேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு அப்பெண் தனது நண்பரை அழைத்துள்ளார். அப்போது தாய்லாந்தைச் சேர்ந்த 2 ஆண்கள் வந்து கார்த்திகேயன் மற்றும் பாஷாவை மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ. 61,784 ரொக்கம், செல்போன், 2 கிரெட்டிட் கார்டுகள் மற்றும் பாஸ்போர்ட்டுகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் பாஷாவை கண்டுபிடித்து தருமாறு உடலில் காயங்களுடன் கார்த்திகேயன் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒரு பெண் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications