அடேங்கப்பா! சீனாவின் அசுர வேக ரயில் பயணம்.. 1,600 கிமீ.. 8 மணி நேர பயணம்! பிரமித்த இந்திய தொழிலதிபர்
பீஜிங்: சீனாவுக்கு சென்ற இந்திய தொழிலதிபர் ஒருவர் அங்குள்ள போக்குவரத்து கட்டமைப்புகளையும் அதிவேக ரயில்களையும் பார்த்து பிரமித்து தனது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 1,600 கிலோ மீட்டர் பயணத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடந்துவிட்டதாகவும், சீனாவில் மக்கள் இவ்வளவு வசதியாக வாழ்கிறார்களே எனவும் அந்த தொழிலதிபர் பதிவிட்டுள்ளார்.
உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடான சீனா, உலக அளவில் தகவல் தொழில் நுட்பத்தில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. உலக வல்லராசக அறியப்படும் அமெரிக்காவுக்கே சவால் விடுக்கும் வகையில் டெக் துறையில் சீனா கண்டு வரும் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.

சீனாவின் உள்கட்டமைப்பு வசதி
அதுபோக போக்குவரத்து துறையில் சீனாவின் உள்கட்டமைப்பு வசதி வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயில்களும் சீனாவில் இயங்கி வருகிறது. இதனால், ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நகரங்களுக்கு கூட ஒரே நாளில் சென்று விட்டு வந்து விடும் அளவுக்கு அந்நாட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ந்துள்ளது.
சீனாவுக்கு சுற்றுலா செல்லும் வெளிநாட்டவர்கள் பலரும் சீனா 2075 ஆம் ஆண்டில் வாழ்ந்து வருகிறது என சொல்லும் அளவிற்கு அங்குள்ள தொழில் நுட்பங்கள் இருப்பதாக கூறுவதை பார்க்க முடியும். அந்த வகையில்தான் தற்போது, இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பன்சால் சீனாவுக்கு சென்றுவிட்டு தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.
1,600 கிலோ மீட்டர் பயணம் செய்தார்
ஆகாஷ் பன்சால் கூறியிருப்பதாவது:- சீனாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்குக்காக நான் சென்று இருந்தேன். மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த மீட்டிங்கிற்காக 1,600 கிலோ மீட்டர் பயணம் செய்தேன். அதுவும் வெறும் 4.5 மணி நேரத்தில் சென்றுவிட்டு வந்தேன். மொத்தம் பயண செலவு ரூ.8 அயிரம் ஆனது. அதாவது 800 கிலோ மீட்டருக்கு ரூ.4 ஆயிரம் வாங்கினார்கள்.
இவ்வளவு தூரம் பயணித்தும் இரவு தூங்குவதற்கு நான் தங்கியிருந்த இடத்திற்கே வந்துவிட்டேன். சீனாவில் வாழ்க்கை எவ்வளவு வசதியாக உள்ளது என்பதை இது காட்டுகிறது. சீனாவின் ரயில் நிலையமும் சிறப்பாக உள்ளது . ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்னால் கூட நீங்கள் செல்லலாம். அனைத்து கேட்களும் திறந்து இருக்கின்றன.
நெட்டிசன்கள் வியப்பு
பயண நடைமுறை டிக்கெட் பெறும் வசதி என அனைத்துமே எளிமையாக உள்ளது. நான் அரை மணி நேரம் தாமதமாக உள்ள ரயிலுக்கு டிக்கெட் எடுத்தேன். அங்கு வந்த செக்யூரிட்டி கார்டு எனது டிக்கெட்டை செக் செய்துவிட்டு 10 நிமிடத்தில் புறப்பட உள்ள ரயிலுக்கான டிக்கெட்டாக கவுண்டரில் மாற்றிக்கொடுத்தார்" என்றார்.
இந்திய தொழிலதிபரின் இந்த பதிவு இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. சில நெட்டிசன்கள் சீனாவில் உள்ள வசதிகளை வியந்து பதிவிட்டு வரும் நிலையில், சில நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவையுடன் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு நெட்டிசன் கூறுகையில், கூகுள் மீட் போதும் இதற்காக ஏன் 800 கிலோ மீட்டர் போக வேண்டும் என்று கேட்டுள்ளார்.
-
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
தீ என பரவிய வதந்தி.. தப்பிக்க பக்கத்து தண்டவாளத்தில் குதித்த 4 பேருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி வீடியோ












Click it and Unblock the Notifications