"இந்தியாவே பரவாயில்லை போல.." கனடாவில் வேலை அவ்வளவு ஈஸி இல்லை.. இந்திய பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ
டொரன்டோ: வெளிநாடுகளுக்குப் போனால் செட்டில் ஆகிவிடலாம் என்று நம்பி வெளிநாடு செல்லும் இந்தியர்கள் இப்போது பெரிய சிக்கல் எதிர்கொண்டு வருகிறார்கள். அங்கு வேலை கிடைப்பது இப்போது ரொம்பவே சிக்கலான ஒரு விஷயமாக மாறி வருகிறது. இதற்கிடையே கனடாவில் வேலை கிடைப்பது எந்தளவுக்குச் சிக்கலாக இருக்கிறது என்பதை விளக்கும் வீடியோவை பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
நம்மில் பலரும் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டால் செட்டில் ஆகிவிடலாம் என்றே நினைப்போம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அது உண்மையாகவே இருந்தது. கஷ்டப்பட்டு கடனை வாங்கி வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டால் ஈஸியாக வேலை கிடைக்கும். அதை வைத்து கடனை அடைப்பது மட்டுமின்றி, செட்டில் ஆகியும் விடலாம் என்ற சூழலே இருந்தது.

கனடா வேலைகள்
ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. வெளிநாடுகளிலும் கூட வேலைவாய்ப்பு சிக்கலாகவே இருக்கிறது. இதனால் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ள இந்தியர்கள் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறார்கள். அப்படி தான் கனடாவில் ஒரு வேலைவாய்ப்பு முகாமில் நடந்த ஒரு சம்பவத்தைக் கனடா வாழ் இந்தியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனடாவில் வேலைவாய்ப்பு முகாமில் இந்திய மாணவர்கள் உட்பட வெளிநாட்டு மாணவர்கள் பலர் வேலைக்காக மிக நீண்ட நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். கனடாவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் கொட்டி கிடப்பதாக இந்தியர்கள் நினைத்தாலும் உண்மை அதற்கு நேர்மாறாக இருப்பதாக அந்த பெண் குறிப்பிடுகிறார்.
நீண்ட வரிசை
அந்த பெண் வீடியோவில் மேலும் கூறுகையில், "கனடாவில் நிறைய வேலைகள் இருக்கிறது. நல்ல பணம் சம்பாதிக்கலாம் என நினைக்கும் இந்திய நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு இந்த வீடியோவைக் காட்டுங்கள்" என்று கூறுகிறார். வீடியோவில் ஒரு வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடுபவர்கள் மிக நீண்ட வரிசையில் நிற்பதையும் அவர் காட்டுகிறார்.
வெறும் 5 காலியிடம்
இதில் விஷயம் என்னவென்றால் அது வேலை கூட இல்லை.. பயிற்சி (internship) தான்.. மேலும், மொத்தமாகவே 5 அல்லது 6 பேரை மட்டுமே எடுக்க உள்ளனர். ஆனால், அதற்கு இத்தனை பேர் அங்குக் குவிந்துள்ளனர். அந்த பெண் காட்டிய வரிசையில் நிச்சயம் சில நூறு பேராவது இருப்பார்கள். அந்த பெண் மேலும், "இதுதான் கனடாவின் உண்மை நிலை. இதற்கு நீங்கள் தயாராக இருந்தால், கனடாவுக்கு வாருங்கள்.. இல்லையென்றால் இந்தியாவே சிறந்தது" என்று பதிவிட்டுள்ளார்.
"வெளிநாட்டு வாழ்க்கை எப்போதும் ஒரு கனவு அல்ல" என்ற தலைப்பில் அந்த பெண் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. கனடாவில் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வேலைவாய்ப்பு நெருக்கடி எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.. இதற்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன்கள்
நெட்டிசன் ஒருவர், "உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் முதல் நேர்மையான வீடியோ இது. கனடாவுக்குச் செல்ல தவறான தகவல்களையும், எண்ணங்களையும் சில திட்டமிட்டுப் பரப்புகிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "கனடாவில் கிட்டதட்ட எல்லா இடங்களிலும் இதுதான் நிலைமை. அடிப்படை வேலைகள் கூட அவ்வளவு சீக்கிரம் கிடைப்பதில்லை" என்றார்
இருப்பினும், சில பயனர்கள் மிகவும் நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி ஒருவர், "ஆம், இது கடினமானதுதான், ஆனால் சரியான திறன்கள் இருந்தால் நிச்சயம் நீங்கள் சாதிக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், "இது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது போல இருக்கிறது. சரியாக எங்கு வேலை தேட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்திருந்தால் பிரச்சினை இருக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
திறமைக்குத் தான் பற்றாக்குறை
அந்த நபர் மேலும், "வான்கூவரில் நிறைய வேலைகள் உள்ளன.. ஆனால் திறமை பற்றாக்குறைதான் பிரச்சினை.. வேலை பற்றாக்குறை இல்லை. மைக்ரோசாப்ட், அமேசான், லூலுலெமன், பிசி ஹைட்ரோ, டெலஸ், போர்டிஸ் பிசி மற்றும் வான்கூவர் கோஸ்டல் ஹெல்த் போன்ற நிறுவனங்கள் எப்போதும் ஆட்சேர்ப்பு செய்கின்றன. ஒரு நாட்டை குறை கூறுவதை விட, சரியான திறன்களைப் பெற்றிருப்பது முக்கியம்" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications