ஆஸ்திரேலியாவில் பெங்களூரு பெண் பொறியாளர் குத்திக் கொலை
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் இந்தியப் பெண் பொறியாளர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியின் புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மீட்டில் உள்ள பாராமட்டா பூங்காவில் இந்தியாவைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பிரபா அருண் குமார் (வயது 41) என்பவர் சனிக்கிழமை கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார்.

இதைக் கண்டு வழிப்போக்கர்களில் ஒருவர் அவசர உதவி மையத்துக்கு அளித்த தகவலையடுத்து, வெஸ்ட்மீட் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
காயம் மிகவும் கொடூரமாக இருந்ததாலும், அவரது உடலில் இருந்து அதிகப்படியாக ரத்தம் வெளியேறி விட்டதாலும் சிகிச்சை பலனின்றி பிரபா அருண் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரபாவை கத்தியால் குத்தியது யார் என்பது தெரியவில்லை. பணி முடிந்து தனது வீட்டுக்கு திரும்பும் வழியில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக வெஸ்ட்மீட் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாராமட்டா பூங்கா அருகே எப்போதும் முகாமிட்டிருக்கும் சில ரவுடிகள் அவ்வழியே செல்பவரை மடக்கி பணம் பறிப்பது வழக்கம். அது போன்ற ஒரு திருடன்தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே இந்த
கொலையைப் பற்றி யாருக்காவது ஏதேனும் பின்னணி தகவல்கள் தெரிந்திருந்தால் அதை போலீசாரிடம் பகிர்ந்து வழக்கின் விசாரணையில் உதவும்படி உள்ளூர் மக்களுக்கு பாராமட்டா பகுதி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரபாவின் தோழி "பாராமட்டா பூங்கா வழியாகச் செல்ல வேண்டாம் என பிரபாவிடம் எச்சரித்திருந்தேன். ஏனெனில், அந்த வழியில் வருவோரை சிலர் தடுத்து நிறுத்தி, பணம் கேட்டு மிரட்டுவார்கள். இன்றைக்கு பிரபாவின் உயிரையே பறித்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தினர் அதிர்ச்சி
இதனிடையே பிரபா கொல்லப்பட்ட சம்பவம் பெங்களூரில் உள்ள பிரபாவின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பணி முடிந்து வரும் போது கணவரிடம் செல்போனில் பேசியபடியே வந்துள்ளார் பிரபா. அப்போது வழிமறித்த நபர் பிரபாவை கத்தியால் குத்தியுள்ளார். தன்னை விட்டுவிடும்படி அந்த நபரிடம் பிரபா மன்றாடியது தனக்கு கேட்டதாகவும் பெங்களூருவில் உள்ள கணவர் தெரிவித்தார். பிரபாவின் 9 வயது மகள் எங்களுடன்தான் இருக்கிறார். ஏப்ரல் முதல் வாரத்தில் அவர் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்த்திருந்தோம்' என்றும் கண்ணீர் மல்க கணவர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியில், சிட்னியின் புறநகர் பகுதியான வெஸ்ட்மெட் பகுதியில் உள்ள பர்ராமட்டா பூங்கா வழியாக நேற்றிரவு இந்தியப் பெண் பிரபா நடந்து வரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர் அப்போது தனது கணவருடன் பேசிக்கொண்டிருந்ததும் பதிவாகியுள்ளது. இதையடுத்து அடையாளம் தெரியாத நபர்கள், அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது தொலைபேசி இணைப்பில் இருந்த கணவரிடம் தம் மீது யாரோ சிலர் கத்தியால் குத்தியதாக பிரபா தெரிவித்துள்ளார்.

Click it and Unblock the Notifications