சவுதியில் இந்திய தொழிலாளியின் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரேபியாவில் கொலை செய்த இந்திய தொழிலாளியின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தண்டனைக்கு உள்ளானவரின் பெயர் முகமது லத்தீப். இவர் தன்னுடன் பணிபுரிந்த டாபர் பின் முகமது அல்-துஸ்காரி என்பவரை குத்தி கொலை செய்தார். பின்னர் பிணத்தை ஒரு கிணற்றில் வீசி மறைத்தார்.
முகமது லத்தீப்புக்கு முகமது - அல் - துஸ்காரி வேலை வாங்கி தந்ததாகவும், அது குறித்து இருவருக்கும் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு தலை துண்டித்து நேற்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் பலாத்காரம், கொலை, ஆயுத கடத்தல், போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் லத்தீப்பையும் சேர்ந்து இந்த ஆண்டு இதுவரை 3 பேரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டில் 78 பேர் தலை துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications