தைவான் கீலுங் நகரில் இந்தியர்கள் விமரிசையாக கொண்டாடிய 'பொங்கல் பண்டிகை'
கீலூங்: தைவான் நாட்டின் கீலூங் நகரில் இந்தியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை சூரியனை வணங்கி, பொங்கல் உண்டு வெகுசிறப்பாக கொண்டாடிமகிழ்ந்தனர்.

கீலூங் நகரில் அமைந்துள்ள தேசிய தைவான் கடல்சார் பல்கலைக்கழகத்தில் (National Taiwan Ocean University) இருக்கும் இந்தியர்கள் அனைவரும் இணைந்து முதல் முறையாக "NTOU பொங்கல் 2021" என்ற பெயரில் பொங்கல் விழாவை மிக விமர்சையாக கொண்டாடினர்.

இந்நிகழ்விற்கு இந்திய தைபே அசோசியேசனின் துணை இயக்குனர் பிஜய் தாஸ், தேசிய தைவான் கடல்சார் பல்கலைக் கழகத்தின் துணைத் தலைவர் முனைவர். மிங்-கன் லீ, தேசிய தைவான் கடல்சார் பல்கலைக் கழகத்தின் சர்வதேச விவகாரங்களின் டீன் முனைவர். ஐ. ஷுவங் சென் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

தேசிய தைவான் கடல்சார் பல்கலைக் கழகத்தின் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆராய்ச்சி மாணவர் சண்டீபன், விருந்தினர் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தமிழ் உணர்வாளர் முனைவர். பினேஷ் உன்னி கிருஷ்ணன், தமிழர்களின் பண்பாடு மற்றும் பொங்கல் பற்றிய சிறப்புகளை எடுத்துரைத்து முனைவர். அனிஷா ஆனந்த் உடன் இணைந்து நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் தேசிய சிங்ஹுவா பல்கலை கழகத்தின் (National Tsing Hua University) ஆராய்ச்சி மாணவி சினேகா சுந்தரனின் பரத நாட்டியத்துடன் பல ஆடல் மற்றும் பாடல் கலை நிகழ்வுகள் என்று பல்சுவை நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பேபி அக்னிஷிகா பினேஷின் நடனமும் பாடலும் அமைந்தது. இந்திய மற்றும் தைவான் நடனக் குழுவினரின் ஆடல் மற்றும் பாடல் என்று இப் பொங்கல் விழா வெகு உற்சாகமாக நடைபெற்றது. முனைவர் ஆதிரா ஜான்சன் விழா நிறைவில் நன்றி கூறினார்.

அதன் பின்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நாட்டுப் பண்னுடன் விழா நிறைவுற்றது.

இந் நிகழ்ச்சியில் தைவானில் வாழும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த விழா குழுவினரை தைவான் வாழ் இந்தியர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications