இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் நடைபெறும் நாளில் லண்டனில் தீவிரவாத தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிர்மிங்காம் நகரில் நடைபெறவுள்ள நாளில் லண்டனில் தீவிரவாதத் தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் நகரின் மத்திய பகுதியில் பாலம் ஒன்றில் நேற்று இரவு பாதசாரிகளை குறிவைத்து வாகனம் ஒன்று தாறுமாறாக பலமுறை மோதியது. இதில் பாதசாரிகள் பலரும் தூக்கி வீசப்பட்டனர்.

அதேசமயம், இன்னொரு பகுதியில் வேனிலிருந்து பாய்ந்த மர்ம நபர்கள் கத்தி, ஆயுதங்களைக் கொண்டு கண்ணில் பட்டவர்களையெல்லாம் தாக்கினர். மொத்தம் 3 இடங்களில் அதாவது லண்டன் பாலம், பாரோ மார்க்கெட், வாக்ஸ்ஹால் ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர்.

7 பேர் பலி

7 பேர் பலி

இந்த 3 சம்பவங்களிலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் காயமடைந்தனர். இது தீவிரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

மார்ச் 22ல் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம்

மார்ச் 22ல் வெஸ்ட்மின்ஸ்டர் பாலம்

இதேபோல தான் கடந்த மார்ச் 22ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதேபோல தற்போது லண்டன் பாலத்தைக் குறி வைத்துள்ளனர்.

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்

இன்று பிர்மிங்காம் நகரில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் லண்டனில் தாக்குதல் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டிக்கு விடப்பட்ட மறைமுக எச்சரிக்கையா இது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மோடி சென்றபோது காபூலில்

மோடி சென்றபோது காபூலில்

இதேபோலத்தான் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி சென்றிருந்தபோது காபூலில் உள்ள ஜெர்மனி இந்திய தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்பு நடந்தது. பலர் கொல்லப்பட்டனர். தற்போது இந்தியா பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள நிலையில் லண்டனில் குண்டுவெடித்துள்ளது.

இந்தியாவுக்கு எச்சரிக்கையா

இந்தியாவுக்கு எச்சரிக்கையா

இந்த சம்பவங்களைப் பார்க்கும்போது சர்வதேச அளவில் இந்தியா சம்பந்தப்பட்ட முக்கிய சம்பவங்கள் நடைபெறுவதற்கு தீவிரவாதிகள் மறைமுகமாக மிரட்டல் விடுக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+