நடுவானில் அனாதையாக பறந்த விமானம்! ½ மணி நேரம் கும்பகர்ணன் போல தூங்கிய விமானிகள்.. 150 பயணிகள் உயிர்?
ஜகர்தா: இந்தோனேஷியாவின் பாடிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் திடீரென்று தாறுமாறாக வானில் பறந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயன்று இருக்கிறார்கள். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை. விசாரணையில் விமானிகள் இருவரும் அரை மணி நேரம் தூங்கியது தெரியவந்துள்ளது.
சமீப காலமாக விமானங்களில் பயணிகளை பீதியில் உறைய வைக்கும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. விமான பயணிகள் நடுவழியில் எமெர்ஜென்சி கதவை திறக்க முயல்வது.. குடிபோதையில் ரகளை செய்வது என அடிக்கடி விமான பயணிகளை இன்னலுக்கு ஆளாக்கும் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில், இதற்கெல்லாம் ஒருபடி மேலே என்று சொல்லும் அளவுக்கு இந்தோனேசியாவில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, விமானம் நடு வானில் பறந்து ஒண்டிருந்த போது விமானிகள் இருவரும் ஒரே நேரத்தில் தூங்கியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் இல்லை.. சுமார் அரை மணி நேரம் விமானிகள் தூங்கியுள்ளனர். இந்தோனேஷியாவின் நடைபெற்ற இந்த விசித்திர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குறட்டை விட்டு தூங்கிய விமானிகள்: இந்தோனாஷியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுலவேசி நகரில் இருந்து தலைநகர் ஜகார்தாவுக்கு கடந்த மாதம் 25 ஆம் தேதி பாடிக் ஏர்பிளைட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 153 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் இரண்டு விமானிகள், 4 விமான பணியாளர்களும் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனது வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றது.
இதனால், விமான கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் விமானிகள் இருவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. சுமார் 35 நிமிடங்கள் இந்த பரபரப்பு நீடித்து இருக்கிறது. அதன்பிறகே விமானம் வழக்கமான பாதைக்கு வந்து தனது பயணத்தை தொடங்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில் விமானிகள் இருவருமே தூங்கியுள்ளது தெரியவந்து இருக்கிறது.
28 நிமிடங்களுக்குப் பிறகு தான்: அதாவது ஏர்பஸ் 320 என்ற அந்த விமானத்தில் 32 மற்றும் 28 வயது மதிக்கத்தக்க இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இணை விமானியிடம் கமாண்ட் விமானி, தனக்கு தூக்கம் அதிகமாக வருகிறது என்று கூறி தூங்கியிருக்கிறார். ஆனால், சிறிது நேரத்தில் இணை விமானியும் தன்னை அறியாமல் தூங்கிவிட்டார்.
விமானிகளிடம் இருந்து 12 நிமிடத்திற்கு மேலாக எந்த தகவல் பரிமாற்றமும் இல்லாததால், ஜகார்த்தாவில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகள் விமானியை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சித்து வந்துள்ளனர். 28 நிமிடங்களுக்குப் பிறகு இணை விமானி தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கிறார். அப்போது தான் விமானம் தவறான பாதையில் செல்வதை உணர்ந்துள்ளார்.
பயணிகள் பாதுகாப்பு குறித்து அச்சம்: அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. விமானம் சரியான நேரத்தில் வந்து தரையிறங்கியுள்ளது. எனினும், விமானிகளின் இந்த அஜாக்கிரதையான செயல் விமான பயணிகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தோனேசிய விமான போக்குவரத்து துறையின் பொது இயக்குனர் மரியா கிறிஸ்டி என்நாத் முர்னி இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "பாடிக் ஏர் விமானத்தின் விமானிகள் நடந்து கொண்ட விதம் கண்டனத்திற்குரியது. ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் விமானிகளுக்கு ஓய்வு நேரம் கொடுப்பதிலும் உரிய கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications