"சீச்சீ" மேட்டர் சொன்ன அப்பா.. "டேய் மகனே".. ஐயோ 42 பேர்.. தட்டாமல் செய்த தனயன்.. தூக்கிய போலீஸ்

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஒரு கொலைகாரன் இருந்தான்.. அவனது கதையைக் கேட்டால் முதலில் "உவ்வே" என்று வாந்திதான் வரும்.. பிறகுதான் அதிர்ச்சி உண்டாகும். அப்படிப்பட்ட கருமம் பிடித்த பின்னணி கொண்டவன் இந்த கொலைகாரன்.

சீரியல் கில்லர் என்ற வார்த்தை இப்போதெல்லாம் சினிமாக்களிலும், கதைகளிலும் மலிந்துவிட்ட ஒன்று... வாசகர்களை, அல்லது பார்வையாளர்களை பீதியில் உறையச்செய்யும் எத்தனையோ சீரியல் கொலைகாரர்களை நாம் பார்த்திருப்போம்.

ஆனால், சினிமாவில் பார்க்கவே பயமாக இருக்கும் சீரியல் கொலைகளைவிட, நிஜத்தில் நடந்துவிடுவது அதைவிட பயங்கரமானது.. கொலைகளுடன் பலாத்காரமும் சேரும் நேரத்தில் அதன் கொடூரம் மேலும் அதிகரித்துவிடுகிறது.

 சீரியல் கொலை

சீரியல் கொலை

ஒரு கொலை நடக்கிறது என்றால், கொலை செய்யப்பட்டவர்களுக்கு எதிரிகள் யார்? முன்விரோதம் உள்ளதா? பழிக்குபழியா? என்ற கோணத்தில்தான் விசாரணை நடக்கும்... ஆனால், சீரியல் கொலையாளிகளை கண்டுபிடிப்பது அத்தனை எளிதானதல்ல.. அமெரிக்காவில் 1980களில் 17 இளைஞர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிவிட்டு, அவர்களை கொலையும் செய்துவிட்டு, கொல்லப்பட்டவர்களின் உடல் பாகங்களை தினமும் உப்பு காரம் போட்டு சாப்பிட்டவர்தான் ஜெஃப்ரே டாமர் என்ற கொடூரன்.. நம் இந்தியாவை சேர்ந்த 8 வயது சிறுவன்கூட இந்த லிஸ்ட்டில் உள்ளது வியப்பை தந்துள்ளது..

 உப்பு காரம்

உப்பு காரம்

படுபயங்கரமான 3 கொலைகளை செய்துவிட்டு, உலகின் இளம் வயது சீரியல் கில்லர் என்ற பெயரையும் அந்த சிறுவன் பெற்றுள்ளான்.. சீரியல் கில்லர்கள் என்று பெயர் இருந்தாலும், பலாத்காரமும் அதில் இயல்பாகவே சேர்ந்துவிடுகிறது.. அப்படிப்பட்ட சீரியல் கில்லர்களின் பல பிளாஷ்பேக்குகள் கேட்டாலே தலை சுற்றிவிடும்.. அப்படிப்பட்டவன் அந்த இந்தோனிஷயா சீரியல் கில்லர்.. 15 வருடங்களுக்கு முன்பு அந்தக் கொலைகாரன் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டான்.. அவனது பெயர் அகமது சுரத்ஜி. 2008ம் ஆண்டு ஜூன் 10ம் தேதி அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 மாந்திரீகம்

மாந்திரீகம்

எதற்காக இவனுக்கு இந்த கடுமையான தண்டனை தரப்பட்டது தெரியுமா? 1986ம் ஆண்டிலிருந்து 1997ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 42 பெண்களையும், சிறுமிகளையும் கொலை செய்தவன் இந்த அகமது சுரத்ஜி. கொடூரமான ஆளாக இருப்பான் போலயே என்று பார்த்தால், இவன் செய்த செயல்கள் எல்லாம் மிகவும் குரூரமானவை... இந்த அகமது சுரத்ஜி ஒரு மந்திரவாதியும்கூட.. இவனிடம் ஏராளமான பெண்கள் வந்து குறி கேட்பது, குடும்பப் பிரச்சினைகளுக்கு நிவாரணம் கேட்பது என வருவார்கள்.

 குறி கேட்டாச்சு

குறி கேட்டாச்சு

அப்படித்தான் கடந்த 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 வயதான கெம்லா தேவி என்ற பெண் வந்துள்ளார்... குறி கேட்க வந்ததோடு சரி, அதற்கு பிறகு, அந்த பெண் வீட்டுக்கு திரும்பவில்லை.. போலீஸில் புகார் கூறப்பட்டு, போலீஸாரும் விசாரணையில் இறங்கினர்... விசாரணையின்போது, ஒரு ஆட்டோ டிரைவர், தான்தான் கெம்லா தேவியை அகமது சுரத்ஜி வீட்டில் விட்டு விட்டு வந்ததாக சொன்னார்.. இதையடுத்து அகமது சுரத்ஜியிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோதுதான், திடுக்கிடும் தகவல்கள் பல கிடைத்தன..

 42 பெண்கள்

42 பெண்கள்

அவன்தான், தேவியைக் கொலை செய்து அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் புதைத்ததாக வாக்குமூலமாக தெரிவித்தான். இதையடுத்து தீவிர விசாரணை கையில் எடுக்கப்பட்டது.. சுரத்ஜி போலீசில் பேச பேச, அப்படியே அதிர்ந்து போனார்கள். 42 பெண்கள், சிறுமிகளை கொலை செய்து அதே கரும்பு தோட்டத்தில் புதைத்துள்ளான் இந்த சுரத்ஜி.. இந்த விஷயத்தை கேள்விப்பட்டு நாடே அதிர்ந்து போனது. ஏன் இப்படி செய்தாய் என்று போலீஸார் விசாரித்தபோது, அகமது கூறிய தகவல்கள் இதுதான்:

 எச்சிலை குடித்த மகன்

எச்சிலை குடித்த மகன்

"என்னுடைய அப்பா ஆவியாக என் கனவில் வந்தார். என்னிடம், "நீ 70 பெண்களின் எச்சிலை (உமிழ்நீரை) குடிக்க வேண்டும். அப்போதுதான் உனக்கு பெரும் மாந்த்ரீக சக்தி கிடைக்கும்" என்று கூறினார். இதையடுத்து நான் பெண்களின் உமிழ்நீரைக் குடித்து சக்தி பெற முடிவு செய்தேன். ஆனால் என்னுடைய அப்பா யாரையும் கொலை செய்ய சொல்லவில்லை. எல்லாரையும் நானாகத்தான் கொல்ல ஆரம்பித்தேன். 1986ம் ஆண்டு ஆரம்பித்து ஒவ்வொருவராக கொலை செய்தேன்... மொத்தம் 42 பெண்களை கொன்றுள்ளேன். பெரும்பாலானவர்கள் சிறுமிகள்தான்" என்று சொல்லி அதிர வைத்தான் அகமது சுரத்ஜி.

 கரும்பு தோட்டம்

கரும்பு தோட்டம்

தன்னிடம் வரும் பெண்களில் இளம் பெண்கள், சிறுமிகளை மட்டும் தேர்வு செய்வான் சுரத்ஜி. பிறகு, அவர்களிடம் நைஸாக பேசி, பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு கூட்டிட்டு போவானாம்.. அங்கு இடுப்பு வரை குழி தோண்டி, அந்த பெண்களை அதில் இறங்க சொல்வானாம்.. யாராவது கேட்டால், இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சாக்கு சொல்லி உள்ளான்.. பிறகு அவர்களை உள்ளே இறக்கி விட்டு, மண்ணை அள்ளி போட்டு, இடுப்பு வரை மூடி அவர்கள் அசையாதவாறு செய்வான்... அதன் பிறகுதான், அவர்களது கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு, அவர்களது உமிழ்நீரை உறிஞ்சிக் குடிப்பான்.

 தலை காணோம்

தலை காணோம்

பிறகு உடலை நிர்வாணமாகி, அந்த தலையை மட்டும் தன்னுடைய வீட்டை நோக்கிப் பார்க்குமாறு செய்துவிட்டு, மிச்ச முழு உடலையும் மண்ணுக்குள் புதைத்து விடுவான். இவ்வளவையும் அதிர்ந்து போய் கேட்ட போலீஸ், சம்பந்தப்பட்ட கரும்பு தோட்டத்தை தோண்டிப் பார்த்தனர்... அப்போது சுரத்ஜி சொன்னமாதிரியே, புதைத்த இடத்தில் பெண்களின் எலும்புக் கூடுகள் கிடந்தன.. அவை புதையுண்ட நிலையில் கிடைத்தன... இதில் என்ன ஒரு கொடுமை என்றால், சுரத்ஜிக்கு மொத்தம் 3 மனைவிகளாம்.. இதில் ஒரு மனைவியான துமினிக்கு, இவன் செய்த எல்லா கிரிமினல்தனமும் தெரியுமாம்..

தாந்த்ரீகம்

தாந்த்ரீகம்

இதனால் அவருக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது.. எனினும், அவர் பெண் என்பதால் அவருக்கான தண்டனையை, ஆயுள் தண்டனையாக அப்போது மாற்றி விட்டனர். இதெல்லாம் பழைய கதைதான்.. ஆனால் இப்படியும் கொடூரமான கொலைகாரர்கள் இருந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ளவே இந்த ஃபிளாஷ்பேக்கை சொல்ல வேண்டியுள்ளது.. மாந்த்ரீகம், தாந்த்ரீகம் என்று யாரிடம் போனாலும் தேவையில்லாத பிரச்சினைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது இப்படிப்பட்ட ஆட்கள் மூலம் நமக்கு, குறிப்பாக பெண்களுக்கு கிடைக்கும் பாடம்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+