திடீரென குலுங்கிய இந்தோனேசியா.. நடுங்கிப்போன மக்கள்! 6.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.

தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு இந்தோனேசியா. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று.

Indonesia’s Sumatra faces 6.1-magnitude earthquake no tsunami alert

நிலநடுக்கம் மட்டுமின்றி எரிமலைகள் சூழ்ந்து இருப்பதால் அதன் வெடிப்புகளும் அடிக்கடி ஏற்படும். இதனிடையே இப்போது அங்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளது.

இந்திய நேரப்படி இரவு 8.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் அல்லது பாதிப்புகள் எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

வடக்கு சுமத்ராவின் படங்சிடெம்புவான் நகரின் தென்மேற்கே கடலில் 84 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

ஆனால் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ளவர்கள், பின் அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், சில கட்டிடங்கள் கடுமையாக நில அதிர்வால் நடுக்கத்தை எதிர்கொண்டது

"ரிங் ஆஃப் ஃபயர்" பகுதிகளில் நிலத்திற்கு அடியே டெக்டோனிக் தட்டுகள் அடிக்கடி மோதும். அதுவே நிலநடுக்கத்திற்கும் எரிமலை வெடிப்பிற்கும் காரணமாக அமைகிறது.

முன்னதாக கடந்த நவம்பர் 21இல் ஏற்பட்ட 5.6 ரிக்டர் நிலநடுக்கத்தில் மேற்கு ஜாவாவின் சியாஞ்சூர் நகரில் குறைந்தது 331 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல 2018இல் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 4,340 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+