முஸ்லீம் நாடான இந்தோனேசியாவை குறிவைக்கும் ஐஎஸ்ஐஎஸ்
ஜகார்தா: மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலரை கவர்ந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பார்வை இந்தோனேசியா பக்கம் திரும்பியுள்ளது.
ஷரியா இஸ்லாமிய சட்டத்தை சிரியா மற்றும் ஈராக்கில் அமல்படுத்தத் துடிக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பலர் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் இந்தோனேசியாவில் கால் தடம் பதிக்க நினைக்கிறது ஐஎஸ்ஐஎஸ்.

இந்தோனேசியாவில் வசிக்கும் 72 சதவீதம் பேர் ஷரியா சட்டத்தை அமல்படுத்த ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இதுவரை இந்தோனேசியாவில் இருந்து 500 பேர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். மேலும் பல வாலிபர்கள் இந்தோனேசியாவிலேயே தங்கி ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளை பரப்ப விரும்புகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியாவைச் சேர்ந்த 200 வாலிபர்கள் ஆப்கானிஸ்தான் சென்று அல் கொய்தா அமைப்பில் சேர்ந்தனர். ஆனால் தற்போது 500 பேர் இந்தோனேசியாவில் இருந்து ஈராக் மற்றும் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
இந்தோனேசியாவில் உள்ள சக்திவாய்ந்த மத அமைப்பின் தலைவர்கள் ஷரியா சட்டத்தை அமல்படுத்த விரும்புகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தால் நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தோனேசியாவுக்குள் வராமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அண்மையில் இந்தோனேசியாவில் உள்ள மால் ஒன்றில் குளோரின் குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. நல்லவேளை அந்த குண்டு வெடிக்கவில்லை. குளோரின் குண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்துவது ஆகும்.
இஸ்லாமிய தலைவர்களும், வாலிபர்களும் ஆதரவு அளிக்கக்கூடும் என்பதால் இந்தோனேசியாவுக்குள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் எளிதில் நுழைய முடியும்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications