கீழே ஒரு ஷாட்ஸ் மட்டும்தான்.. மேல டிரஸ் கிடையாது.. இணையத்தையே புரட்டி போட்ட வெட்டிங் போட்டோ!

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: திருமணம், இப்போதெல்லாம் தங்களது கவுரவத்தை காட்டக்கூடிய ஒரு இடமாக மாறிவிட்டது. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழக் கூடிய அரிய நிகழ்வு என்பதால் இருப்பதிலேயே விலை உயர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு ஊர் பார்க்க பிரமாண்டமாக திருமணம் செய்வதுதான் இப்போது பேஷன்.

ஆனால், மணமகன், வெறும் டிரவுசர் போட்டுக்கொண்டு மேலாடை கூட அணியாமல் ஒரு திருமணம் நடந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.

இணையதளம் முழுக்க இப்போது வைரலாக சுற்றி வருகிறது அந்த புகைப்படம்.

மணமகன் நிலைமை

மணமகன் நிலைமை

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா பகுதியை சேர்ந்த மணமக்கள்தான் இப்படி ஒரு திருமணம் நடத்தியுள்ளனர். திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக மணமகன் பெட்ரோல் வாங்க சென்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் ஒரு பக்கம் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவர் அறிவுரைப்படி கைக்கு தொட்டில் போன்ற உபகரணம் வழங்கப்பட்டு கையை அதில் பாதுகாப்பாக வைத்துள்ளார் மணமகன்.

கோட்டு சூட்டு போடவில்லை

கோட்டு சூட்டு போடவில்லை

அதேநேரம் குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்ய வேண்டுமே.. என்ன செய்வது.. திருமணத்திற்கு வாங்கிய கோட்டு சூட்டு எதையும் அணிய முடியாத நிலைமையில் அவர் இருந்தார். எனவேதான், கீழே ஒரு ஷாட்ஸ், மேலே மேலாடை இல்லாமல் மணம் முடித்துள்ளார் அந்த மணமகன்.

 ஏப்ரல் 2ம் தேதி திருமணம்

ஏப்ரல் 2ம் தேதி திருமணம்

ஏப்ரல் 2 ஆம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது. மணமகன் பெயர் சுப்ராப்டோ. மணமகள் பெயர் எலிண்டா டிவி கிறிஸ்டியானி. இவர்கள் திருமணம், கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் ரீஜென்சியில் உள்ள லெங்காங் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கணவரின் உடல்நிலை தனது திருமண ஆடையை அணிய அனுமதிக்கவில்லை என்பதால், இப்படி ஒரு ஆடையை அணிந்தார் என்கிறார் எலிண்டா.

வைரலான புகைப்படம்

டுவிட்டர் பயனர் @br0wski ட்விட்டரில் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் வைரலாகி, 14,500 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் 3,200 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் பெற்றுள்ளன. மணமகனின் உடையைப் பற்றி அறியதான் நெட்டிசன்கள் ஆர்வமாக இருந்தனர். ஏன் இப்படி உடை உடுத்தியுள்ளார் என்பது பலரது கேள்வியாக இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+