ஜஸ்ட் 4 நிமிடம்தான்.. எல்லாம் போச்சு.. மாயமான இந்தோனேஷியா விமானம் பற்றி பரபரப்பு தகவல்
ஜகார்த்தா: ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய இந்தோனேஷியாவை சேர்ந்த ஸ்ரீ விஜயா விமானம் 4 நிமிடத்துக்குள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.40 மணியளவில் இந்த விமானம் விமான நிலையத்திலிருந்து கிளம்பியுள்ளது. அடுத்த 4 நிமிடத்துக்குள் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து விட்டது. அதற்குள்ளாக அந்த விமானம் 10 ஆயிரம் அடி உயரத்தை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது.
10 ஆயிரத்து 900 அடி உயரம் வரை அது பறக்கும்போது கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் பிறகுதான் என்ன ஆனது என்று தெரியவில்லை. 1994ஆம் ஆண்டு முதல் இந்த விமானம் இயக்கப்படுகிறது. 26 வருடம் பழமையான விமானம் இதுவாகும்.

பயணிகள்
விமானத்தில் அதிகபட்சமாக 120 பேர் பயணிக்கக்கூடிய இருக்கை வசதி இருந்தபோதிலும் எத்தனை பயணிகள் இருந்தார்கள் எத்தனை ஊழியர்கள் இருந்தார்கள் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. சுமார் 50 பயணிகள் இருந்ததாக சில ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜகார்த்தா கடற்கரை
இதனிடையே, விமானம் அந்த நாட்டு தலைநகர் ஜகார்த்தா கடற்கரையில் உடைபட்ட நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் தகவல் கொடுத்துள்ளனர். அது விமான பாகங்கள்தானா என்பதை உறுதி செய்யும் பணிகளை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.

போயிங் விமானம்
2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லயன் போயிங் 737 மேக்ஸ் ஜெட் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 12 நிமிடங்களுக்குள் இந்த விபத்து நடைபெற்றது. இந்த விபத்தில் 190 பயணிகள் கொல்லப்பட்டனர்.

விபத்துகள்
போயிங் 737 வகை விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன. எனவே பல நாடுகளிலும் இந்த வகை விமானங்கள் இயக்கப்படுவது தவிர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications