மாறி மாறி பொழியும் குண்டு மழை! இஸ்ரேலில் உள்ள தமிழர்களின் நிலை என்ன? அப்டேட் சொன்ன தமிழக அரசு
இஸ்ரேல்: காசா மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை என்ன? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சில தகவல்களை பகிர்ந்திருக்கிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள். இவர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது மிக தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் தற்போது வரை 950 காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 5,000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். ஒருபுறம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. மறுபுறம் மருந்துகளை கொண்டு வந்த டிரக்குகள் இஸ்ரேல் படையினரால் திருப்பியனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து கேள்வி எழுந்திருந்தது. இது தொடர்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தற்போது விளக்கமளித்திருக்கிறது. அதாவது, இஸ்ரேலில் சிக்கியுள்ள 101 தமிழர்களும் பாதுகாப்பாக இருப்பதாக நலத்துறை கூறியுள்ளது.
தமிழர்கள் தவிர கேரளாவை சேர்ந்த சிலரும் இஸ்ரேலில் சிக்கியுள்ளனர். இரு தினங்களுக்கு முன்னர் இவர்களில் 41 வயதான ஷீஜா ஆனந்த் எனும் செவிலியர் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலால் படுகாயமடைந்தார். அவர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேலில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருக்கும் தனது கணவருடன் போன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார் அப்போது பயங்கர சத்தத்துடன் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவருடன் வசித்து வந்த மற்றவர்களுக்கு போன் செய்து பார்த்தபோது ஷீஜா ஹமாஸ் படையினரால் கடுமையாக தாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். இவரை போலவே ஏராளமான இந்தியர்கள் இஸ்ரேலில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர். மத்திய அரசும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளது. முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் பணியாற்றி வந்த 9 ஐ.நா ஊழியர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓசூர்-க்கு ஓடிவந்த இஸ்ரேல் நிறுவனம்.. ஈரான் போருக்கு நடுவில் சூளகிரி-யில் மாஸ்டர் பிளான்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications