"தொழுவத்தில்" நடந்த ஆச்சரியம்.. இப்படிக்கூட நடக்குமா.. இரவு பகலாக ஷிப்ட் வேற.. வாயை பிளக்கும் மக்கள்
சீனாவில் செம்மறி ஆடுகள் வட்டமடித்து சுற்றும் வீடியோ ஒன்றும் ஷேர் ஆகி வருகிறது
பெய்ஜிங்: இணையத்தில் செம்மறி ஆடுகளின் வீடியோ ஒன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. என்ன காரணம்?
சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வட சீனாவில் இனெர் மங்கோலியா என்ற பகுதி உள்ளது... இங்கே போடௌ என்ற இடத்தில் வசித்து வருபவர் மியோ... இவர் ஆட்டுப்பண்ணை சொந்தமாகவே வைத்திருக்கிறார்.
அந்த பண்ணையில் மொத்தம் 34 ஆட்டு தொழுவங்கள் உள்ளன.. இதில் ஒவ்வொரு தொழுவத்திலும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளும் உள்ளன..

தொழுவம்
தனித்தனி தொழுவத்தில் ஏராளமான ஆடுகள் உள்ளன.. இந்நிலையில், 13வது தொழுவத்தில் உள்ள ஆடுகள், திடீரென சுற்ற ஆரம்பித்துவிட்டன.. அதாவது எல்லா ஆடுகளும் வரிசையாக நின்று, கடிகாரம் போல, ரவுண்டாக சுற்றி நடக்க துவங்கிவிட்டன.. ஆரம்பத்தில் சில ஆடுகள் மட்டும்தான் இப்படி நடக்க ஆரம்பித்ததாம்.. ஆனால், அவைகளை பார்த்ததும் மற்ற ஆடுகளும் நடக்க ஆரம்பித்துள்ளன.

செம்மறி ஆடுகள்
எல்லா ஆடுகளும் ஒரே மாதிரியாக, ஒரே திசையில், ஒரே நேரத்தில், வட்டமாக நடந்த சம்பவம் ஆச்சரியத்தை கிளப்பி விட்டுள்ளது. இது ஏதோ திடீரென அந்த நேரம் மட்டும் வட்டமாக நடக்கவில்லை.. இப்படியே தொடர்ந்து 12 நாட்கள் இந்த நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் நடந்தமாவேறே உள்ளன.. அதுவும் இரவு பகலாக வட்டமடித்து வருகின்றன.. இதில் இன்னொரு ஹைலைட் என்னவென்றால், ஆடுகள் வட்டமடித்து டயர்ட் ஆகிவிட்டால், அந்த ஆடுகள் ரெஸ்ட் எடுக்க போய்விடுமாம்.. உடனே மற்ற ஆடுகள் வந்து லைனில் நின்று வட்டமடித்துக் கொண்டே இருக்குமாம்..

மாறி மாறி ரெஸ்ட்
மாறி மாறி ரெஸ்ட் எடுத்து, ரவுண்டு அடித்து கொண்டிருக்கின்றன.. 12 நாட்களை கடந்தும் இந்த சுழற்சி நடையை மட்டும் அந்த ஆடுகள் கைவிடவில்லையாம். இந்த வீடியோதான் இணையத்தில் பரவி வருகிறது.. இது பலருக்கு ஆச்சரியத்தையும், பலருக்கு குழப்பத்தையும், தந்து வருகிறது.. ஆனால் இதற்கு கால்நடை மருத்துவர்கள் லிஸ்டீரியோசிஸ் என்ற நோய், அந்த செம்மறி ஆட்டை தாக்கியிருக்கலாம் என்கிறார்கள்.

மூளை வீக்கம்
அதாவது, ஒரு பக்கம் மூளையை வீக்கம் அடைய செய்து இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ள தோன்றுமாம்.. அநேகமாக அந்த நோய் இந்த ஆடுகளை தாக்கியிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள்.. ஆனாலும் உறுதியான தகவல் தெரியவில்லை.. இப்படித்தான், கடந்த வருடமும் கிழக்கு சாக்செக்ஸில் செம்மறி ஆடுகள் வட்டமடித்து, கொஞ்ச நாள் கழித்து நின்றுவிட்டதும் நினைவிருக்கலாம்.. எனினும், இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது.

அமானுஷ்யம்
மற்றொருபக்கம் இதுகுறித்த யூகங்கள் கிளம்பி உள்ளன.. ஒருவேளை இதெல்லாம் ஏலியன்ஸின் வேலையாக இருக்கலாம் என்கிறார்கள்.. மேலும் சிலர் அமானுஷ்யம்தான் காரணம், அதுதான் இப்படி ஒரே இடத்தில் உயிர்களை பித்து பிடித்ததுபோல் சுற்ற வைக்கும் என்கிறார்கள்.. ஆனால் மருத்துவர்களோ, ஆடுகளின் மூளையை பாதிக்கும் லிஸ்டீரியோசிஸ் (Listeriosis) என்ற பாக்டீரியல் நோய் தான் காரணம் என்கிறார்கள்.. மூளையின் ஒரு பகுதியை இந்த பாக்டீரியா தாக்கும்போது, ஆடுகள் இது போல் ஒரே இடத்தில் இடைவிடாமல் வட்டமிடுமாம்.. இந்த அறிகுறி தென்பட்ட 2 நாட்களுக்குள் ஆடுகள் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஏலியன்ஸ்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் சொல்லும்போது, முதலில் ஒரு சில ஆடுகள் இப்படித்தான் சுற்றத் தொடங்கியது.. அதை பார்த்ததுமே மற்ற ஆடுகளும் அதனுடன் சேர்ந்து கொண்டன.. ஆனால், ஆடுகள் எல்லாமே நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றன.. எந்த ஒரு ஆடுக்கும் பாதிப்பு இருப்பது போல் தெரியவில்லை" என்கிறார்.. எனினும், பாக்டீரியா தொற்றாக இருந்துவிட்டால் அதனால் பல உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால், ஆடுகள் சோர்வாகவோ அல்லது கிறங்கி விழநேர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகும்படி இந்த ஆட்டுப்பண்ணை உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications