Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ. 5 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக.. யூடியூபில் வீடியோ பார்த்து 2 கால்களையும் வெட்டிய மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டனில் காப்பீடு பணம் 5 லட்சம் பவுண்டுகள் இந்திய மதிப்பில் ரூ. 5.4 கோடி பெறுவதற்காக மருத்துவர் ஒருவர் தனது முழங்காலுக்கு கீழ் உள்ள இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீல் ஹாப்பர் என்ற அந்த மருத்துவர் காப்பீடு பணம் பெறும் நோக்கில் கால்களை அகற்றியுள்ளதாக காப்பீடு நிறுவனங்கள் குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளன. முழங்கால்களை பாதுகாப்பாக அகற்றுவது எப்படி என்பது தொடர்பான வீடியோக்களை வெப்சைட்டில் இருந்து நீல் ஹாப்பர் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

காப்பீடு

நிதி சார்ந்த விஷயங்களில் பிரதானமாக பார்க்கப்படுவது இன்சூரன்ஸ் தான். குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு எந்தவொரு உடல்நலக் குறைவோ, விபத்தோ என்ன பிரச்சனை நேர்ந்தாலும் அந்தக் குடும்பத்தினர் பெரிய பணப் பிரச்சனைகளில் சிக்காமல் பாதுகாக்கவும், உரிய மருத்துவம் பெறுவதற்கும் காப்பீடு என்பது உதவி வருகிறது. குறிப்பாக, குடும்பத்தில் வேலைக்குச் செல்லும் நபருக்கு விபத்து ஏற்பட்டாலோ அல்லது இறந்தாலோ அந்தக் குடும்பத்தினருக்கு நிதி சார்ந்த பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாக்க காப்பீடு என்பது மிகவும் உதவிகரமாக உள்ளது.

insurance-money-doctor-removes-two-legs-for-rs-5-crore-insurance-money-in-britain

கோவிட் காலம்

ஹெல்த் இன்சூரன்ஸ், ஆக்சிடன்டல் இன்சூரன்ஸ், டேர்ம் இன்சூரன்ஸ், வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் என பல காப்பீடு திட்டங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் காப்பீடு என்பது மிகவும் அத்தியாவசியமானதாக மாறிவிட்டது. கோவிட் காலங்களில் பெரும்பாலான குடும்பத்தினர் தப்பித்ததே காப்பீடு உதவியினால்தான் என்று சொல்லலாம். பெரிய நிதிச்சுமைக்கு ஆளாகாமல், கடனுக்கு உள்ளாகமல் மருத்துவ செலவுகளில் இருந்து காப்பீடு மூலமாக தப்பித்துக் கொள்ளலாம். ஒரு சிலர் இந்த காப்பீடு திட்டங்களை தவறாகவும் பயன்படுத்துகின்றனர்.

பிரிட்டன் சம்பவம்

அந்த வகையில், பிரிட்டனில் காப்பீடு பணம் 5 லட்சம் பவுண்டுகள் இந்திய மதிப்பில் ரூ. 5.4 கோடி பெறுவதற்காக மருத்துவர் ஒருவர் தனது முழங்காலுக்கு கீழ் உள்ள இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீல் ஹாப்பர் என்ற அந்த மருத்துவர் காப்பீடு பணம் பெறும் நோக்கில் கால்களை அகற்றியுள்ளதாக காப்பீடு நிறுவனங்கள் குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளன.

மருத்துவர் செய்த காரியம்

பிரிட்டனைச் சேர்ந்தவர் 49 வயதான நீல் ஹாப்பர் என்ற மருத்துவர். இவர் காப்பீடு பணம் 5 லட்சம் பவுண்டுகள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 5.4 கோடி பெறுவதற்காக மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றியுள்ளார். உடலுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த வீடியோக்களையும் வலைத்தளங்களில் இருந்து பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவர் தனது இரண்டு கால்களிலும், முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றியுள்ளார்.

காப்பீடு நிறுவனம் குற்றச்சாட்டு

இந்நிலையில், நீல் ஹாப்பர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கால் அகற்றப்படுவது தொடர்பான வீடியோக்களை நீல்ஹாப்பர் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது தெரியவந்துள்ளது. காப்பீடு நிறுவனம் அளித்த புகாரில், நீல் ஹாப்பர் தனக்கு ரத்த நாளப் பிரச்சினை உள்ளது என்றும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால் அது உடல் முழுவதும் பரவும் என்று தங்களை நம்ப வைக்க முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளன. இன்சூரன்ஸ் பணத்துக்காக மருத்துவர் ஒருவர் தனது இரண்டு கால்களையும் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+