கோஹ்லி- அனுஷ்கா திருமணம்.. இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் நடந்து இருக்கா?
இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா நேற்று திருமணம் செய்து கொண்டனர்.
Recommended Video

ரோம்: இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா நேற்று திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்திற்கு பின் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.
காதலித்தது தொடங்கி காதலில் பிரச்சனை வந்தது வரை இந்த ஜோடி பல சம்பவங்களை கடந்து வந்து இருக்கிறது. மேலும் நேற்று மிலன் நகரில் நடந்த திருமணத்திலும் சில அதிரிபுதிரி சம்பவங்கள் நடந்துள்ளது.
அதேபோல் டிவிட்டர் பேஸ்புக் என சமூக வலைதளங்கள் முழுக்க இந்த விஷயம்தான் இப்போதும் வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
|
காதல் பிறந்த கதை
இந்தியாவில் தற்போதையை ரோமியோ-ஜீலியட் ஜோடி கண்டிப்பாக இவர்கள்தான். 2013ல் ஒரு விளம்பரத்திற்காக இந்த ஜோடி சந்தித்துக் கொண்டனர். அப்போது முதலில் நண்பர்களாக மாறி பின் காதலில் கசிந்துருகி ஒன்றாக காதலிக்க தொடங்கினார்கள். இவர்கள் காதல், வதந்தி என நினைத்த போது கோஹ்லி வெளிப்படையாக காதல் குறித்து டிவிட்டரில் அறிவித்தார். அனுஷ்காவை 'மை லவ்' என குறிப்பிட்டு அவர் ரசிகைகளுக்கு வருத்தத்தை உண்டாக்கினார்.
|
பிரச்சனை
இவர்கள் காதல் நன்றாக சென்று கொண்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து கோஹ்லி 4 போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அதற்கு அனுஷ்காதான் காரணமாக கூறப்பட்டார். அனுஷ்கா சர்மா களத்திற்கு வந்தால் கோஹ்லி சரியாக விளையாடமாட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும் அனுஷ்காவை பலரும் திட்டினார்கள். இதற்காக கோபப்பட்ட கோஹ்லி ரசிகர்கள் குறித்து வருத்தத்துடன் டிவிட் செய்து இருந்தார். அதில் 'வெட்கப்படுகிறேன் உங்களை நினைத்து, அனுஷ்காதான் எனக்கு நல்ல எண்ணத்தை கொடுத்தது'' என்று அழகாக குறிப்பிட்டு இருந்தார்.
|
திருமணம் நடந்தேவிட்டது
இவர்கள் காதலிக்க தொடங்கிய பின் எல்லா வருடமும் டிசம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடக்க போகிறது என்று வதந்தி பரவி வந்தது. இந்த வருடமும் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உண்மையிலேயே கோஹ்லி அனுஷ்காவை மணமுடித்தார். இதனை இருவரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் உறுதி செய்துள்ளனர்.

விக்கிக்கு தெரியும்
இந்த நிலையில் இதில் ஒரு சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. திருமணம் 15ம் தேதி தான் நடக்கும் என்று செய்திகள் வந்தது. ஆனால் 11ம் தேதியே திருமணம் நடந்துள்ளது. இந்த செய்தி வெளியே தெரிவதற்கு முன்பே விக்கிபீடியா பக்கம் சரியாக திருமணம் நடந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதை கிரிஷ் என்ற நபர் சரியாக எடிட் செய்து மாயம் நிகழ்த்தி இருக்கிறார்.
|
இணையத்தில் வைரல்
தற்போது இவர்கள் திருமண வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பலரும் இவர்கள் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இப்போதும் கூட டிவிட்டரில் இந்த செய்திதான் வைரலாக இருக்கிறது.
-
இனி விராட் கோலியே அவுட்டானாலும் கவலை இல்லை.. பிளே ஆஃப் ஸ்பெஷலிஸ்ட் ரஜத் பட்டிதார் இருக்காரு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications