இண்டர்போல் தலைவரையே காணவில்லை.. சீனாவில் மாயம்.. உலக நாடுகள் அதிர்ச்சி!
சர்வதேச போலீஸ் படையான இண்டர்போல் படையின் தலைவர் மெங் ஹாங்வெய் காணாமல் போய் இருக்கிறார்.
பெய்ஜிங்: சர்வதேச போலீஸ் படையான இண்டர்போல் படையின் தலைவர் மெங் ஹாங்வெய் காணாமல் போய் இருக்கிறார்.
சர்வதேச போலீஸ் மற்றும் விசாரணை படையான இண்டர்போலின் தலைவராக மெங் ஹாங்வெய் தேர்வு செய்யப்பட்டார். இவர் கடந்த 2016ம் வருடம் தேர்வானார்.
இவர் சீனாவை சேர்ந்தவர். இவருக்கு 64 வயது ஆகிறது. இவர் சீனாவின் மக்கள் பாதுகாப்பு துறையின் துணை அமைச்சராகவும் இருக்கிறார்.

காணவில்லை
இவரது பதவிக்காலம் 2020ல் முடிகிறது. இவர் தனது மனைவியுடன் பிரான்சில் உள்ள லயன் பகுதியில் வசித்து வந்தார். அங்கு இண்டர்போல் தலைமையகம் உள்ளது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி சீனா சென்ற இவர் காணாமல் போய் இருக்கிறார்.

விசாரணை நடத்தினர்
அங்கு சென்றதில் இருந்தே இவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மனைவி பிரான்ஸ் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரான்ஸ் போலீஸ் இதற்காக தனி விசாரணை படையையும் உருவாக்கி உள்ளது.

முன்னாள் தலைவர்
இவர் சீனாவில் தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டவர். சீனாவின் தீவிரவாத எதிர்ப்பு படையின் முன்னாள் தலைவர் ஆவார். அதேபோல் போதை பொருள் தடுப்பு பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார். அப்போது இவர் சிறப்பாக பணியாற்றியதால் இவர் இண்டர்போலின் தலைவர் ஆனார்.

கடத்தலா?
இந்த நிலையில் இவர் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகள் இவரை கடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்து வருகிறது. வேறு சில காரணங்களுக்காக இவர் சீனாவில் கைது செய்ய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications