ஆப்கானிஸ்தான் மருத்துவமனையை யு.எஸ். தாக்கியது பற்றிய ரகசிய வீடியோ சிக்கியது
நியூயார்க்: ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரில் மருத்துவமனை மீது அமெரிக்க போர் விமானம் தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பலியாகினர். இந்நிலையில் போர் விமானத்தில் உள்ள விமானியின் அறையில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ கிடைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் குந்தூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது அமெரிக்க போர் விமானம் கடந்த 3ம் தேதி தாக்குதல் நடத்தியதில் 22 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அந்த மருத்துவமனையை நடத்தி வரும் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் தாலிபான்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியபோது மருத்துவமனையை தெரியாமல் தாக்கிவிட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரி ஜெனரல் ஜான் காம்பெல் தெரிவித்தார். மருத்துவமனை தெரியாமல் தாக்கப்பட்டுவிட்டதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்திய போர் விமானத்தின் விமானி அறையைில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க ராணுவ விசாரணையாளர்கள் அந்த ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை நடந்து கொண்டிருப்பதால் வீடியோ, ஆடியோவின் விபரங்களை தெரிவிக்க பென்டகன் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அமெரிக்க வீரர்களை தாலிபான் தீவிரவாதிகள் தாக்குகிறார்கள் என்று நினைத்து தான் அமெரிக்கா வான்வெளித் தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
