ஈரானில் பெண்கள் வாலிபால் போட்டிகளைப் பார்க்க தடை!
டெஹ்ரான்: வாலிபால் போட்டியை கண்டு ரசிக்க பெண் ரசிகைகள், பெண் பத்திரிகையாளர்களுக்கு ஈரான் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ஈரான்- இத்தாலி இடையே உலக வாலிபால் போட்டிக்கான லீக் போட்டிகள் இன்று டெக்ரானில் நடைபெறுகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்குள்ள ஆசாதி ஸ்டேடியத்தில் ஈரான்- இத்தாலி இடையே நடைபெற்ற வாலிபால் போட்டியைக் காணச்சென்ற பெண் பத்திரிகையாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

வாலிபால் ஆணையம் தடை
அடுத்த மூன்று போட்டிகளைக் காண பெண் ஊடகவியலாளர்களுக்கும், பெண் ரசிகைகளும் அனுமதியில்லை என்று ஈரான் வாலிபால் விளையாட்டு ஆணையம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பெண்கள் போராட்டம்
இதனையடுத்து ஸ்டேடியத்தின் வாசல்முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்து விடுதலை
சகாரா டெய்லி நாளிதழின் ரிப்போர்ட்டர் பாதேமா ஜமல்பூரும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்றார். அவரை கைது செய்த போலீசார் ஆறுமணிநேரம் சிறை வைத்து பின்னர் விடுவித்தனர்.

ஃபேஸ்புக்கில் கொதிப்பு
இதனை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற வாலிபால் போட்டியைக் காண பெண்களும், ஊடகவியாலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

இம்முறை மட்டும் தடை ஏன்…
ஆனால் இம்முறை எந்தவித விளக்கமும் அளிக்காமல் வாலிபால் போட்டியைக் காண தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இதனை புகராகவும் ஈரான் அதிபருக்கு அனுப்பியுள்ளார்.

எழுதலாம்.. பார்க்கக் கூடாதா…
ஈரான் நாட்டில் சமூக வலைத்தளங்களில் எழுதும் அளவிற்கு பெண்களுக்கு சுதந்திரம் உள்ளது. ஆனால் போட்டியைக் காண தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் எப்படி ஊடகங்களில் பதிவு செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

துணை அதிபரும் எதிர்ப்பு
இதனிடையே வாலிபால் போட்டியைக் காண பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஈரான் நாட்டின் துணை அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கால்பந்தாட்ட போட்டியை காணவும்
இதேபோல பிரேசிலில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியை நேரில் சென்று காணவும் ஈரான் பெண்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டிவியில் பார்க்கத் தடை இல்லை
ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கால்பந்தாட்டப்போட்டியைக் கண்டு ஈரான் பெண்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெருவில் வந்து கொண்டாடிய பெண்கள்
கடந்த சனிக்கிழமையன்று அர்ஜெண்டினாவின் வெற்றியை தெருக்களில் உற்சாகமாக கொண்டாடித்தீர்த்தனர் ஈரான் பெண்கள்.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications