இராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஈரான் குண்டு வீச்சு- இராக்குக்குள் ஈரானின் முதல் தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ஈரானும் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இராக் மற்றும் சிரியாவின் பல நகரங்களை பிடித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஐ எஸ் தீவிரவாதிகள் மீது கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.

Iran bombs Islamic State targets in Iraq

ஆனால் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற ஈரான் மறுத்து வந்தது. 1979 முதல் அமெரிக்கா - ஈரான் உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் மீதான பொருளாதார தடை கூட அமெரிக்கா விதித்தது.

இருப்பினும் ஐ.எஸ் தீவிரவாதிகள் விவகாரத்தில் இரு நாடுகளும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தன. இந்த நிலையில் ஈராக்கின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது ஈரான் கடந்த சில நாட்களாக வான் வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

1979ல் அமெரிக்காவிடம் வாங்கிய எப்-4 போர் விமானமூலமே குண்டுகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சதாம் மறைவுக்குப் பின் இராக்குக்குள் ஈரான் நடத்தும் முதல் பெரிய தாக்குதல் இதுவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+