அசிங்கப்பட்ட ட்ரம்ப்.. அவருக்கு இதே வேலை தான்! சண்டைக்கு நாங்க வரலையே! போர் நிறுத்தத்தை மறுத்த ஈரான்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதாகவும், இரு நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல் மீதான போர் நிறுத்தம் குறித்த அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் தான் ஈரான் மீது முதலில் போரை தொடங்கியது என்பதை சுட்டிக்காட்டி உள்ளது.

ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக கூறி இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (12ஆம் தேதி) முதல் ஈரான் மீது ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் கடுமையாக தாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

தங்கள் மீது தாக்குதல் நடத்தி ஈரான் தவறு செய்து விட்டதாகவும், பதிலடி மிக கடுமையாக இருக்கும் என கூறிய இஸ்ரேல் நேற்று ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகள், அதிநவீன ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது.

Iran Israel Ceasefire

போர் தீவிரமான நிலையில், இரண்டாவது வாரத்தில் எதிர்பாராத விதமாக களத்தில் குதித்தது அமெரிக்கா. ஈரான் அணு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்து இருக்கிறார் டொனால்ட் டிரம்ப். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்ஃபஹான் ஆகிய 3 அணு தளங்கள் மீது தங்கள் நாட்டின் விமானப்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதாக கூறி இருந்தார். இதனால் ஈரான், அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருந்தது.

இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான். அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகள் கத்தாரை நோக்கி பாய்ந்த நிலையில் அவை வெற்றிகரமாக தடுத்து அழிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இருதரப்பும் சேதம் குறித்த முழுமையான தகவல்களை பகிர்ந்து கொள்ளாத நிலையில், இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்.

இருதரப்பிடையே 24 மணி நேரத்திற்குள் முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றும் இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படும் என ட்ரம்ப் பதிவிட்டு இருந்தார். இதனால் மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஒரு விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இஸ்ரேல் தான் ஈரான் மீது போரை தொடங்கியது. தற்போதைக்கு போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தியதால் நாங்களும் நிறுத்தியுள்ளோம். இருந்த போதும் ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் தான் எடுக்கப்படும். கடைசிவரை போராடிய ஈரானிய ஆயுதப்படைகளுக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்து குறித்த சந்தேகம் எழுந்திருக்கிறது. ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் நிறுத்தினேன் என ட்ரம்ப் கூறிய நிலையில் இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்தது. தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அவர் கூறிய நிலையில் உடனடியாக அதனை ஈரான் மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+