அணுகுண்டு சோதனையா? நிலநடுக்கமா? திடீர் நிலஅதிர்வால் குலுங்கிய ஈரான் – பீதியில் பொதுமக்கள்
டெஹ்ரான்: ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் மசந்தரான் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் பதிவானதாக கூறப்படும் நிலையில் ஈரான் அணுகுண்டு சோதனை நடத்துகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் மசந்தரான் மாகாணத்திற்கு இடைப்பட்ட பகுதிகளில் நேற்று இரவு திடீரென்று நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக அவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து தஞ்சமடைந்தனர்.

இதனை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ளது. இதுபற்றி ஈரான் ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தியில், ''தலைநகர் டெஹ்ரானில் 4.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்படவில்லை. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி ஈரான் அரசு செய்தி நிறுவனம் ஐஆர்ஐபி கூறுகையில், ''நில அதிர்வு ஏற்பட்டு ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக பெரிய நிதி இழப்புகள் எதுவும் பதிவாகவில்லை'' என கூறியுள்ளது. ஈரானில் இதுபோன்று அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக மார்ச் 3ல் தெற்கு ஈரானில் உள்ள கெராஷ் பகுதியில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் தற்போது தெஹ்ரான், மசந்தரான், கோம் மாகாணம் மற்றும் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் அவசரகால குழுக்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டன.
இதற்கிடையே தான் ஈரான் அணுகுண்டு சோதனை நடத்தியதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதற்கு இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதோடு ஈரான் மீது போரை தொடங்கி உள்ளன. அணுஆயுதம் தயாரிப்பதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் ஈரான் அதற்கு உடன்படவில்லை.
இதனால் ஈரான் அணுகுண்டு சோதனை ஏதாவது நடத்தியதா? இதனால் தான் நிலஅதிர்வு ஏற்பட்டடதா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
-
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications