கடனை அடைக்க கிட்னி விற்றால் போதாது.. விந்தணு உறுப்பு, கண்களையும் விற்க தயாராகும் ஈரான் மக்கள்! அவலம்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: போர் காரணமாக ஈரானில் பொருளாதார நெருக்கடி மோசமாகியுள்ளது. குடும்ப செலவுகளை சமாளிக்கவும் கடன்களை அடைக்கவும் மக்கள் தங்களது உடல் உறுப்புகளையே விற்பனை செய்யும் அளவுக்கு அங்கு மோசமான நிலை உருவாகியுள்ளது. சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் மட்டுமின்றி விதைப்பை, கண்களின் கருவிழி உள்ளிட்ட உடல் திசுக்களையும் கூட விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.

மத்திய கிழக்கில் இன்னுமே அமைதி திரும்பவில்லை. அங்கு பல மாதங்களாகவே போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதர தடைகளையும் விதித்துள்ளது. இத்தோடு அமெரிக்காவின் கடற்படை முற்றுகையும் சேர்ந்துவிடவே ஈரான் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

Iran Economic Crisis

நிலைமை மோசம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவில்லை. இதனால் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் உச்சத்தில் இருக்கும் நிலையில், விலைவாசி மிக மோசமாக இருக்கிறது. இது உள்ளூர் மக்களுக்கு பெரும் சிரமத்தை தருகிறது.

இதனால் நிலைமை சமாளிக்க உடல் உறுப்புகளை விற்கும் நிலைக்கு அந்நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மே மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் டெலிகிராம் சேனல் ஒன்றில் 600க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் மூன்றில் ஒரு பங்கு விளம்பரங்கள் உடல் உறுப்பு விற்பனை தொடர்பாக இருந்துள்ளது

விளம்பரங்கள்

குறிப்பாக சிறுநீர் விற்பனை தொடர்பாக மட்டும் 498 விளம்பரங்கள் இருந்துள்ளன. எலும்பு மஜ்ஜை விற்பனை குறித்து 279 விளம்பரங்கள், கல்லீரல் விற்பனை 51 விளம்பரங்கள், விதைப்பை விற்பனை 15 விளம்பரங்கள், கருவிழி விற்பனை 2 விளம்பரங்கள் இருந்துள்ளன. மேலும், 142 விளம்பரங்களில் சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை இரண்டும் விற்பனைக்கு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. 26 விளம்பரங்களில் சிறுநீரகம், எலும்பு மஜ்ஜை, கல்லீரல் என மூன்றையும் விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.

இந்த விளம்பரங்களுக்கு பின்னால் இருக்கும் வறுமையும் கடன் சுமையும் அதிர்ச்சியளிக்கின்றன. தனது மகளின் எதிர்காலத்தை பாதுகாக்க உயிருக்கு முக்கியமான உறுப்புகளைக்கூட விற்கத் தயாராக இருப்பதாக ஒருவர் தெரிவித்துள்ளார். ஆடை வியாபாரம் செய்து வந்த மற்றொருவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் அதிகரித்துவிட்டதாகவும் இதனால் சில கடன்களையாவது அடைக்க உடல் உறுப்பை விற்க நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொடூரம்

வாடகை வீட்டிலேயே பல ஆண்டுகளாக வசிப்பவர்கள், அன்றாடத் தேவைகளுக்குக்கூட பணமில்லாமல் தவிப்பவர்கள் என பலரும் விளம்பரம் செய்துள்ளனர். இரண்டு மகள்களை வளர்க்கும் தாய் ஒருவர், குடும்பத்தின் அடிப்படை செலவுகளைச் சமாளிக்க தனது உடல் உறுப்புகளையும் விற்க முன்வந்திருக்கிறார். சிலர் எந்தெந்த உறுப்புகளை தானம் செய்ய முடியும் என்பது கூட தெரியாமல் விளம்பரம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அமெரிக்கா- ஈரான்

ஈரான் மக்கள் இந்தளவுக்கு மோசமாக பாதிக்கப்பட்டாலும் கூட போர் இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. ஒரு பக்கம் ஈரான் மீதான பொருளாதார அழுத்தம் காலவரையின்றி தொடரும் என்ற முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது. கடற்படை முற்றுகை, பொருளாதாரத் தடைகள், வர்த்தகத் தடைகள் என ஈரானுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. ஈரானின் எண்ணெய் வருவாய் முழுமையாக இல்லாமல் போனால் இறங்கி வந்தாக வேண்டும் என்பது அமெரிக்காவின் நிலைப்பாடு.

ஆனால், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அரசு நீண்டகால பொருளாதார தடைகளை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அதேநேரம் பொருளாதாரம் உடனடியாக மிக மோசமாக சரிந்துவிடாது என்றும் நம்புகிறது. இதன் காரணமாகவே தொடர்ந்து அமெரிக்காவை எதிர்த்து ஈரான் போராடி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+