ஈரான்-அமெரிக்கா பஞ்சாயத்து முடிவுக்கு வருது.. இந்தியாவுக்கு ஹேப்பி நியூஸ்! என்னனு பாருங்க

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானுக்கும்-அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இது பற்றிய முக்கிய அப்டேட்டை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் கொடுத்திருக்கிறார். இது இந்தியாவுக்கான மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது.

ஈரானும்-அமெரிக்காவும் ராசியானால் இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும். இதனால் விலையும் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Iran US Middle East

கச்சா எண்ணெய்

அதாவது ஈரான் அணு சக்தியை ஆயுதத்திற்காக பயன்படுத்த கூடாது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்திருந்தன. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் 2015ல் ஒப்பந்தம் போட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் யுரேனியத்தை ஈரான் 3.67 சதவிகிதத்திற்கு மட்டுமே செறிவூட்ட வேண்டும். இதை ஈரான் ஏற்றுக்கொண்டால் ஈரானிலிருந்து கச்சா எண்ணெயை மேற்கு நாடுகள் வாங்கிக்கொள்ளும்.

யுரேனியம் எனும் ஆயுதம்

ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த 2018ம் ஆண்டு அப்போதைய அதிபர் (இப்போதும் அதிபர்தான்) டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். இந்த ஒப்பந்தம் ஒரு ஏமாற்று என்றும், இதன் மூலம் ஈரான் மட்டுமே வளர்ச்சியடைகிறது என்றும் அவர் விமர்சித்திருந்தார். அமெரிக்கா கழன்றதையடுத்து ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்க தொடங்கியது. தற்போது 60 சதவிகிதம் வரை செறிவூட்டியிருக்கிறது.

அணுகுண்டு அச்சம்

இது 90 சதவிகிதத்தை தொட்டால் அணு ஆயுதம் உருவாக்கப்படும். 60லிருந்து 90ஐ எட்டுவது என்பது எளிது. எனவே ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க வாய்ப்பிருக்கிறது என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்திருக்கிறது. இந்த அச்சம் காரணமாக பொருளாதார தடைகளையும் விதித்திருக்கிறது. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையயான உறவு இதனால் பாதிக்கப்பட்டது. அதாவது தடைக்கு முன்பு வரை தினந்தோறும் சுமார் 4-5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வந்தது.

இந்தியாவுக்கு சிக்கல்

ஆனால் சர்வதேச தடை காரணமாக அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு இந்தியா இந்த எண்ணெய் கொள்முதலை நிறுத்தியது. ஈரானுக்கு மாற்றாக சவுதி மற்றும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. சவுதியிடமிருந்து எண்ணெய் வாங்கினால் டாலரில்தான் அதற்கான தொகையை செலுத்த வேண்டும். இது தலைவலி பிடித்த விஷயம். அதேபோல ரஷ்ய எண்ணெய் தள்ளுபடியில்தான் கிடைக்கிறது. என்றாலும் கூட இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

லாபம் தரும் ஈரான் எண்ணெய்

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கினால் நமக்கு நல்ல பலன்கள் இருக்கின்றன. இந்த எண்ணெய் சலுகை விலையில் கிடைக்கும். எனவே மாதம் ரூ.1,200-ரூ.1,500 கோடி வரை மிச்சமாகும். தற்போது ஒரு பேரல் 90 டாலருக்கு கிடைக்கிறது. இதே ஈரானிடமிருந்து வாங்கினால் 87-85 டாலருக்கு கிடைக்கும். இனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ரூ.10 வரை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமாக வேண்டும் எனில், ஈரான் மீதான் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும்.

ஈரானின் நம்பிக்கை

இதற்கான பேச்சுவார்த்தை சமீபத்தில் கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா தரப்பிலிருந்து விட்காஃப், ஈரான் தரப்பிலிருந்து அதன் வெளியுறவுத்துறை அமைச்சர் அபாஸ் அராக்சி ஆகியோர் சந்தித்திருந்தனர். இந்த சந்திப்பு பாசிட்டிவாக இருந்ததாகவும், அடுத்த சந்திப்பின்போது விவகாரம் முடிவுக்கு வரும் என்றும் ஈரானின் அபாஸ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

யாதார்த்தம் முக்கியம்

சமீபத்தில் ரஷ்யாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்கா யதார்த்தமாக இருந்தால் நிச்சயம் இந்த விவகாரம் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது, "அவர்கள் நம்மை மரியாதையுடன் அணுகினால், யதார்த்த நிலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினால் விஷயம் சீக்கிரமே முடிந்துவிடும். நாங்கள் யுரேனியம் செறிவூட்டல் விஷயத்தில் சமரசம் செய்துக்கொள்ள தயார். ஆனால் அமெரிக்கா மீண்டும் இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறாது என்று உறுதியாக சொல்ல வேண்டும்" என கூறியிருக்கிறார்.

இரு நாடுகளும் சமாதானமாக போனால், ஈரான் மீதான பொருளாதார தடைகள் நீக்கப்படும். இது இந்தியாவுக்கு நல்ல பலன் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+