இஸ்ரேலுடன் முழு போருக்கு தயார்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஈரான்! 3ம் உலகப்போர் வந்துவிட்டது!
தெஹ்ரான்: கடந்த ஆண்டு ஈரானின் அணு சக்தி கட்டமைப்புகளை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் உடன் முழு போருக்கு தயார் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
எனவே இஸ்ரேல் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், இதன் மூலம் 3ம் உலகப்போர் தொடங்கலாம் என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.

ஈரான் சொன்னது என்ன?
ஈரான் நாட்டின் உச்ச தலைவரான காமேனியின் மூத்த ஆலோசகரான யாஹ்யா ரஹீம், "நாங்கள் இஸ்ரேலுடன் சண்டை செய்ய ரெடியாகி வருகிறோம். இது சிறிய மோதலாக இல்லாமல், முழு போராக இருக்கும். மற்றவர்களிடம் இல்லாத ஆயுதம் எங்களிடம் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி, முகமது பாக்பூர் இது குறித்து கூறுகையில், ஈரான் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள ரெடியாக இருக்கிறது. நாங்கள் முழுமையனா போருக்கு தயாராக இருக்கிறோம்" என கூறியிருக்கிறார்.
புது ஆயுதம்
இதற்கிடையில் ஈரான் புது வகையான அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வருகிறது. குறிப்பாக ஓரிரு நாட்களுக்கு முன்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்காவின் அல் தஃப்ரா விமான நிலையத்தின் மாதிரியை உருவாக்கி, அதன் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதற்காக கெய்ப்பர் மற்றும் ஃபத்தாஹ் போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தியிருக்கிறது. இந்த வகை ஏவுகணைகள் நிலத்திற்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள்
இந்த வகை ஏவுகணைகள் ஹைப்பர் சோனிக் ரகத்தை சேர்ந்தது. அதாவது இது, ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லும். எனவே இதனை இடைமறித்து தாக்குவது எல்லாம் நடக்காத காரியம். இந்த சூழலில் ஈரானின் எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. மறுபுறம் அமெரிக்கா ஈரான் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறது.
குறுக்கே வந்த டிரம்ப்
"ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் அச்சுறுத்தும் ஏவுகணைகளை ஈரான் உருவாக்குகிறது. அணு ஆயுத திட்டத்தை மீண்டும் தொடங்க கூடாது என்று வார்னிங் கொடுக்கப்பட்ட பின்னரும், ஈரான் அணு ஆயுத முயற்சியை தொடர்ந்து செய்து வருகிறது" என்று குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு ஈரான் கடுமையாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. டிரம்பின் கருத்துகள் தவறானவை, மக்களைத் திசைதிருப்பும் நோக்குடையவை என ஈரான் மறுத்திருக்கிறது.
டிரம்பின் குற்றச்சாட்டும், இஸ்ரேல் மீதான ஈரானின் போர் அறிவிப்பும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியையும் அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications