அரபு உலகில் புது வசந்தம்.. கை கோர்த்த சவுதி - ஈரான்.. சல்மானுக்கு போன போன்! சீனாவால் அரண்ட அமெரிக்கா
பெய்ஜிங்: மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. முக்கியமாக ஈரான் - சவுதி ஒன்று சேர்ந்தது அமெரிக்காவை உலுக்கி உள்ளது.
பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.

பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 7 வருடங்களுக்கு முன் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக தங்கள் உறவை முறித்துக்கொண்டன. சவுதி அரேபியா மூலம் ஷியா தலைவர் நிமிர் அல் நிமிர் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஈரானில் இருந்த சவுதி அரேபியா ராஜாங்க ஊழியர்கள் தாக்கப்பட்டனர். இந்த மோதலால் இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக உறவை முறித்துக்கொண்டன. இந்த நிலையில் இவர்களுக்கு இடையிலான மோதல் என்பது சவுதி அரேபியாயில் ராஜாங்க ரீதியாக பெரிய அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இரண்டு நாடுகளும் பல்வேறு பிராக்சி போர்களில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. சீனா இவர்களுக்கு இடையில் மத்தியச பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. கடந்த 5 நாட்களாக இதற்காக பெய்ஜிங்கில் மத்தியச பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
அதன் முடிவாக தற்போது இரண்டு நாடுகளும் மீண்டும் உறவை தொடர்வதாக அறிவித்து உள்ளன. அதாவது இரண்டு நாடுகளும் மாறி மாறி தூதரகங்களை திறக்கும். போன் மூலம் பேசுவதற்கான ஹாட் லைன் திறக்கப்படும். அதேபோல் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளும் இனி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படியே இரண்டு நாட்டிற்கும் இடையில் உறவு புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சவுதி மன்னர் சல்மான், மற்றும் முடி அரசர் முகமது பின் சல்மான் ஆகியோருக்கு ஈரான் அழைப்பு விடுத்து உள்ளது.
தங்கள் நாட்டிற்கு வரும்படி அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்கா இதனால் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது . சவுதி ஈரானுடன் நெருக்கமானதை விரும்பாத அமெரிக்கா சிஐஏ அதிகாரிகளை சவுதிக்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications