இஸ்ரேலை நோக்கி.. செஜில் வகை ஏவுகணைகளை வீச தொடங்கியது ஈரான்! ரொம்ப கஷ்டம்!
தெஹ்ரான்: செஜில் ஏவுகணைகள் என்பது, ஈரான் வைத்திருக்கும் மிகவும் மேம்பட்ட ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணையாகும். இதனை தடுப்பது என்பது சாத்தியமான விஷயம் என்றாலும், ஒரே நேரத்தில் ஏராளமான ஏவுகணைகள் வந்தால் அதை தடுக்க முடியாது. இந்த ஏவுகணைகளை தான் தற்போது இஸ்ரேல் மீது ஈரான் வீச தொடங்கியுள்ளது.
சண்டையில் பலமான ஆயுத்தத்தை வெளியில் கொண்டுவர ஒரு தருணம் இருக்கும். ஈரான் இப்போது அப்படியான புள்ளியில்தான் இருக்கிறது. எனவே தன்னுடைய பலமான ஆயுதங்களில் ஒன்றான செஜில் ரக ஏவுகணைகளை, ஈரான் பயன்படுத்த தொடங்கியுள்ளது.

இந்த வகை ஏவுகணை 18 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் விட்டமும், 23,600 கிலோ எடையும் கொண்டது. திட எரிபொருள் மூலம் இயங்கும் இரு-நிலை பாலிஸ்டிக் ஏவுகணையான இது, சுமார் 2,000 கி.மீ. தூரம் பாயும் திறனையும், இலக்குகளை துல்லியாக தாக்கும். 700-1000 கிலோ வெடிபொருளைச் சுமந்து செல்லும் ஆற்றலையும் கொண்டது. பிரச்சனை என்னனெில் இது ஹைப்பர்சோனிக் வகையை சேர்ந்த ஏவுகணையாகும்.
செஜில் ஏவுகணை, வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது, ஒலி வேகத்தை விட பல மடங்கு அதிகமான வேகத்தில் வரும். இவ்வளவு வேகமான பொருளை சரியாகக் கண்டறிந்து தாக்குவது சவாலானது.
திட எரிபொருள்: திரவ எரிபொருள் ஏவுகணைகளுக்கு எரிபொருள் நிரப்ப அதிக நேரம் ஆகும். இதனால் அவற்றைக் கண்டறிய முடியும். ஆனால், திட எரிபொருள் கொண்ட செஜில் ஏவுகணையை உடனடியாக ஏவ முடியும் என்பதால், எச்சரிக்கை நேரம் குறைவாக இருக்கும்.
பாதை மாற்றம் மற்றும் இடைமறிக்கும் அமைப்புகள்
நவீன செஜில் ஏவுகணைகள் இலக்கை நோக்கி வரும்போது நேராக வராமல், வளைந்து செல்லும் திறன் கொண்டவை. இதனால் அவற்றைத் தாக்குவது கடினம். செஜில் போன்ற ஏவுகணைகளை மூன்று நிலைகளில் இடைமறித்து அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
Arrow-3 (இஸ்ரேல்): இந்த அமைப்பு விண்வெளியிலேயே ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. நீண்ட தூர ஏவுகணைகளைத் தடுப்பதற்கான முக்கிய ஆயுதமாக இது பார்க்கப்படுகிறது.
THAAD (அமெரிக்கா): 'தாட்' எனப்படும் அமெரிக்க அமைப்பு, ஏவுகணை இலக்கை நெருங்கும் நேரத்தில், வளிமண்டலத்தின் மேல் பகுதியில் வைத்து அதைத் தாக்கி அழிக்கும்.
Patriot PAC-3 மற்றும் வெற்றி வாய்ப்பு
Patriot PAC-3: ஏவுகணை இலக்கை மிக அருகில் நெருங்கிய பிறகு, கடைசி கட்டத்தில் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்துவார்கள். இது ஒரு 'ஈட்டிக்கும் கேடயத்திற்கும்' இடையிலான போட்டி போன்றது.
ஒரே ஒரு செஜில் ஏவுகணை அனுப்பப்பட்டால், அதை இடைமறித்துத் தடுப்பதற்கான வாய்ப்பு 90% வரை சாத்தியம். ஆனால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் அனுப்பப்பட்டால், அவற்றை அனைத்தையும் இடைமறித்து அழிப்பது கடினமாகிவிடும்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications