ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு! ஈரான் புதிய தலைவர் சொத்து மதிப்பு எவ்வளவு?
தெஹ்ரான்: இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த நிலையில் புதிய தலைவராக அவரது மகன் மொஜ்தபா கமேனி பதவியேற்றுள்ளார். ஸ்விஸ் வங்கியில் பணம், லண்டனில் பல ஆயிரம் கோடியில் வீடு என இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய கூட்டு தாக்குதலில் ஈரானின் உச்ச அதிபர் கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பழி வாங்கும் நட வடிக்கையாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.

ஈரான் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈரானின் சட்டப்படி ஒரு தற்காலிகக் குழு நாட்டை நிர்வகித்து வந்தது. இதையடுத்து ஈரானின் நிபுணர்கள் அவை எனப்படும் உயர்மட்டக் குழு ஆலோசனை செய்தது. அதன்படி கொல்லப்பட்ட அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார்.
56 வயதான மொஜ்தபா கமேனிக்கு, ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் அனைத்து அரசு விவகாரங்களிலும் முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமேனியின் சொத்து மதிப்பு தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சொத்து மதிப்பு எவ்வளவு?
மொஜ்தபா கமேனியின் சொத்து மதிப்பு ரூ.25 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. லண்டனில் புகழ்பெற்ற பிஷப் அவென்யூ பகுதியில் 1,100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடுகள் மற்றும் பாரசீகு வளைகுடா கப்பல் போக்குவரத்து தொழில், சுவிஸ் வங்கி முதலீடுகள் என மொஜ்தபாவுக்கு சொத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.
இவை அனைத்து பினாமி பெயரிலேயே இருப்பதாகவும் புளூம்பெர்க் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பா, வளைகுடா, வட அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயினில் ஹோட்டல்கள் என சொத்து பட்டியல் நீள்கிறது. அதே நேரத்தில், ஈரானில் 1979 ஆம் ஆண்டு ஏழைகள் மற்றும் இஸ்லாம் என்ற பெயரில் மன்னராட்சியை கவிழ்த்த புரட்சியில் முக்கிய பங்கை உச்ச தலைவரின் குடும்பம் ஆற்றியது.
எளிய வாழ்க்கை வாழ்வதாக
மத கோட்பாட்டுக்கு கட்டுப்பட்டு கமேனியின் குடும்பம் எளிய வாழ்க்கை வாழ்வதாக ஈரான் அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனால், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை பயன்படுத்தி அந்த குடும்பம் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தி வருவதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மொஜ்தாபா கமேனிக்கு உள்ள அதிகாரம்
புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, ஈரான் ராணுவம் மற்றும் சக்திவாய்ந்த புரட்சிகரக் காவல்படையின் தலைமைத் தளபதியாகச் செயல்படுவார். அணு ஆயுதங்களை உருவாக்கப் பயன்படும் செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பு மீதான முழு அதிகாரம் இனி இவரிடமே இருக்கும். நாட்டின் அரசியல் மற்றும் மத விவகாரங்களில் இவருடைய முடிவே இறுதியானது. மொஜ்தபா கமேனி தேர்வை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மொஜ்தபா கமேனி தேர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி அவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்பவர் யாராக இருந்தாலும், அவர் இஸ்ரேலின் இலக்காகக் கருதப்பட்டு அழிக்கப்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.
-
டிரம்ப் அதிரடி: ஈரான் போர் முடிவுக்கு வருகிறது.. பாகிஸ்தானில் 2வது மீட்டிங் விரைவில் -
டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு -
வெளிச்சம் தெரிகிறது.. இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை.. மீண்டும் Big Boss ஆக மாறும் பாகிஸ்தான்! -
சீனாவுக்கு எதிராக அமெரிக்கா செய்யும் சதி.. சுதாரித்துக்கொண்ட ஜி ஜின்பிங்.. ஈரான் தான் மையப்புள்ளி! -
முறிந்த பேச்சுவார்த்தை.. முளைக்கும் புது நம்பிக்கை! ஒரே ரூமில் அமர்ந்து பேச அமெரிக்கா- ஈரான் சம்மதம் -
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா! -
இஸ்ரேல் ஈரானை அடிச்சா..இந்தியாவுக்கு வலிக்கும்! சாப்பாட்டுக்கே அல்லாடப் போகும் 25 லட்சம் இந்தியர்கள்! -
அதிபருக்கு நெருக்கமானவர்களை தூக்கிய.. மாஜி இஸ்ரேல் மொசாட் ஏஜென்ட்கள்... அதிரும் ஐரோப்பா! -
ஈரானுக்கு மிகப்பெரிய ஆஃபர் கொடுத்த ரஷ்ய அதிபர் புடின்.. அரண்டுபோன டிரம்ப் 'இது மட்டும் நடக்க கூடாது' -
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்! -
வரும்.. ஆனா.. வராது! ஈரான் போர் முடியுமா? முடியாதா? மிகத் தெளிவாகக் குழப்பும் டிரம்ப்! அடுத்து என்ன?












Click it and Unblock the Notifications