ஒரே பேச்சுதான்.. ஒதுங்கிப் போகும் டிரம்ப்.. அமைதிக்கு அவசர அழைப்பு.. உரசிப் பார்க்கும் ஈரான்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அமைதிக்கு அழைப்பு விடுத்தும் இன்று ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அமைதிக்கு அழைப்பு விடுத்தும் இன்று ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை வலுத்துள்ளது. இந்த சண்டை கண்டிப்பாக மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

டிரம்ப் எப்படி
இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நேற்றைய பேட்டியில், போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. ;போர் சில விஷயங்களுக்கு தீர்வாக அமையாது. அதனால் அதை நாங்கள் விரும்பவில்ல. ஈரானை தனிமைப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்.

ஈரான் எப்படி
ஈரான் மீதான நடவடிக்கைகளை நாங்கள் நிர்வாக ரீதியாக மேற்கொள்வோம். ஆயுத ரீதியாக செய்ய மாட்டோம். ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிப்போம் . ஈரானை உலக நாடுகள் இணைந்து தனிமைப்படுத்த வேண்டும்.

அணு ஆயுதம்
ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்., ஈரான் மீதான பொருளாதார தடைகள் தொடரும். அமெரிக்காவை மிரட்டும் போக்கை ஈரான் நிறுத்த வேண்டும், என்று டிரம்ப் கூறினார்.

ராக்கெட்ட தாக்குதல்
ஆனால் இதை ஈரான் பெரிய அளவில் காதில் போட்டுக்கொள்ளவில்லை. நேற்று டிரம்ப் பேச்சை தொடர்ந்து இன்று மீண்டும் ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது . ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.

அமைதி முக்கியம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியை நிலைநாட்டும் வகையில் இப்படி பேசினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஈரான் அவர் பேசி சில மணி நேரங்களில் தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. அதிலும் தாக்க கூடாது என்று அறிவிக்கட்ட கிரீன் ஃசோன் பகுதியில் ஈராக்கில் ஈரான் தாக்கியுள்ளது.

சுலைமானி மரணம்
சுலைமானி மரணம் ஈரானை அந்த அளவிற்கு அதிர்ச்சி அடைய, கோபம் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரான் போருக்கு தயார் ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஈரானுக்கு நிறைய ஆதரவு இதில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது .
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications